பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பிடியும் களிறும்

இடையிலே பிறர் செருக்கை அடக்கியதைக் காட்டும் புலித்தோல் இருக்கிறது. அவன் கழுத்தில் அழகான கொன்றை மாலை புரள்கிறது. சிவபிரானுக்கு உரிய அடையாள மாலை அது; மங்கல நிறமான மஞ்சள் நிறமுடையது; மென்மையான மணமுடையது.

பதவியினலே உண்டாகும் செருக்கையும் அடக்கு பவன் இறைவன் என்பதை அப்பெருமான் கையிலுள்ள கபாலம் காட்டுகிறது. படைப்புத் தொழிலைச் செய்த பிரமனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தன. நமக்கும் ஐந்து தலை; சிவனுக்கும் ஐந்து தலை, நாம் செய்வது முதல் தொழில். ஆகவே நாம் மிகப் பெரியோம்' என்று அவன் தலை தருக்கினன். இறைவன் அந்தத் தருக்குக்குக் காரணமாகிய தலையை மாத்திரம் கிள்ளிக் கையில் வைத்துக் கொண்டான். அது காய்ந்து போக, கபாலத்தை மாத்திரம் ஏத்திக் கொண்டான்.

இறைவன் கபாலத்தை ஏந்தியிருப்பது, செருக்கை அடக்குபவன் அவன் என்பதைக் காட்டுவதோடு, அக் கபாலம் வேறு பல உண்மைகளையும் காட்டும் அறிகுறி யாக நிலவுகிறது. பிரமணப் படைப்புக் கடவுள் என்று சொல்கிருேம். உயிர்களைப் பிறக்கும்படி செய்கிறவன் அவன். பிறப்புக்கு மூலம் எதுவோ அதற்கு அடையாளம் பிரமன். அவன் செருக்கை அடக்கின அருட் செயல், சிவபிரான் பிறப்புக்கு மூலமான ஆணவத்தை அழித்து முத்தி தருபவன் என்பதை விளக்குகிறது. தலையில் எழுதுகிற பிரமனுடைய தலையையே குப்புறச் செய்தவன் இறைவன்; கபாலத்தைக் கையில் ஏந்தும்போது புடைப்புப் பகுதி கீழ் நோக்கித் தானே இருக்கும்?

அவன் பிரம கபாலத்தை ஏந்தி அன்புப் பிச்சை கேட்கிருன். இதைப் பார்; பிறப்பைப் போக்குபவன் நான். உன் அன்பைத் தா என்று உணர்வூட் டி. ஆன்பு