பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும்

இல் வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் ஈடுபட்டு இன்பம் நுகர்ந்தார்கள். இல் வாழ்க்கையின் திரண்ட பயன் அறம் செய்வது; ஆதலால் தம்முடைய இல்லத் துக்கு வரும் விருந்தினரைப் பேணுதலும், தவத்தினரை யும் அந்தணரையும் போற்றி உபசரித்தலும், சுற்றத் தாரைத் தழுவி அன்பு செய்தலும், இரப்பவருக்கு ஈதலும் ஆகிய பல துறைகளிலும் அவர்கள் சிறந்து நின்றனர். கண் இரண்டும் ஒன்றையே காணுதல் போல, அற நினைவிலே காதலனும் காதலியும் ஒன்றி தின்ருர் கள். அதனால் அவர்களுக்குப் புண்ணியமும் புகழும் கிடைத்தன.

அவர்களுடைய புகழில்ை, அவர்களைக் குறை கூறுவாரே இல்லாமல் போனர்கள். பிறருக்குப் பல வகையில் உதவி புரிவதே அவர்களுக்கு வழக்கமாகப் போயிற்று. அதஞல் அவ்வூரில் உள்ள அனைவரும் அவர் களுடைய உபகாரத்தால் நனைந்து, அன்புக்கு ஆட்பட்டு, நன்றி பாராட்டுகிறவர்கள் ஆகிவிட்டனர். மற்ற ஊர் களிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் வீட்டையே நோக்கி வந்தனர். ஊரின் பெயரைச் சொன்ன அளவிலே அடுத்தபடி அந்தத் தலைவனுடைய பெயரே எல்லோரு டைய நினைவிலும் தோன்றியது. அத்தகைய புகழ் அவனுக்கு உண்டாயிற்று.

இவ்வாறு பல வகை அறங்களைச் செய்வதற்குப் பொருள் இன்றியமையாதது. புகழும் கல்வியும் நாளடை வில் வளரும். பொருளோ செலவு செய்யச் செய்யக்