பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பிடியும் களிறும்

தலைவி இல் வாழ்க்கையில் விருந்தினரைப் பேணுவது முதலிய பல அறங்கள் இருக்கின்றன. அந்த அறங் களைக் குறைவறச் செய்வது மிக அரிது.

தலைவன்: ஆம்; அப்படி அரிதாகிய அறனை எய்திலுைம் நமக்கு அருளியோராகிய தவ முனிவருக்கு வேண்டிய வற்றை அளித்தல் பின்னும் அரிது. அது புண்ணியம் உடையவர்களுக்கே ஆகும். அந்தப் பேறு கிடைகும் மால்ை, அதன்பயனக அதிகமான புண்ணியம்சேருக். ஞானிகளாகிய முனிவர்கள் ஆணவம் கழன்ற பெரி யோர்கள்; செப்லொழிந்த சிலர்கள். அவர்கள் செப் யும் செய்கையின் பயன் அவர்களைச் சாராது. கர்மங் கடந்த சீவன்முக்தர்கள் அவர்கள். ஆயினும் உலகில் இயங்குவதால் அவர்களால் சில செய்கைகள் நிகழ் கின்றன. அவர்கள் உண்ணும் பொழுது சில பகுதிகள் சிந்துகின்றன. அவற்றை எறும்பு முதலியன உண் கின்றன. அவை உண்ணும்படி செய்தது புண்ணியச் செயல். அதற்குப் பயன் புண்ணியம், அவர்கள் நடக்கிருர்கள். அவர்களை அறியாமல் அவர்கள் காலடியில் ஒர் எறும்பு மிதிபட்டு இறக்கிறது. அது பாவச் செயல். அதற்குப் பயன் பாவம். முன்பு சொன்ன புண்ணியமும் இந்தப் பாவமும் ஞானிகள் இயங்கும்போது உண்டாகின்றன. ஆல்ை இறைவன் திருவருளிலே ஊறி ஞானம் பெற்று நிற்கும் அவர் களே இருள் சேர் இரு வினையும் சேர்வதில்லை. விளைந்த புண்ணிய பாவங்களுக்குப் போக்கு ஒன்று வேண் டாமா? அந்த ஞானிகளே யார் ஆதரிக்கிருர்களோ அவர்களுக்கு ஞானியர் செயலால் விளைந்த புண்ணிய மும், அவ களுக்குத் துன்பம் செய்தும் இழித்தும் குறை கூறியும் வாழ்பவருக்கு அவர் செயலால் விளைந்த பாவமும்சேரும் என்று நூல்கள் கூறுகின்றன. ஆதலால் அருளியோராகிய பெரியார்களுக்கு அளித்