பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பிடியும் களிறும்

யெல்லாம் அணுகாமல் பாதுகாத்துக் கொள்வதற்குப் பொருள் வேண்டும். எவ்வளவு பெரிய பகையாக இருந்தாலும் பொருள் இருந்தால் அதை வென்று விடலாம். அவரோடு சேராமல் இடுக்கண் புரிவா ரெல்லாம் அவர் பெருமையைக் கண்டு மனம் குலேந்து அழிவர்; இடையூறு புரிந்தால் அவருடைய திறலுக்கு எதிர் நிற்கமாட்டாமல் தேய்ந்துபோவார். ஆகவே பெரிதாகிய பகையை வென்று பேணுரைத் தெறு வதற்கும் பொருளே தக்க கருவியாக உதவும்.

தலைவி : பொருளால் அறம் வளரும், பகை அழியப் பொருள் பெருகும் என்பதை இப்போது நன்ருகத் தெரிந்துகொண்டேன்.

தலைவன் : அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் இல்லறத்தில் கிடைப்பன. அறம் செய்யப் பொருள் வேண்டும் என்றும், பகைவரை அழித்துப் பொருள் செய்யவும் பொருள் வேண்டுமென்றும் சொன்னேன். இன்பம் நுகர்வதற்கும் அப்பொருள் துணையாக நிற்கும்.

தலைவி : உள்ளங்கள் ஒன்றை ஒன்று விரும்பிப் பொருந்து கின்ற காதல் தானே இன்பத்துக்கு இன்றியமை யாதது ?

தலைவன் : உண்மைதான். செடி வளரவேண்டுமானல் அதற்கு ஆணி வேர் இருக்கவேண்டும். வெறும் வளாரும் தழையும் இருப்பது போதாது. ஆணி வேரின் பலந்தான் செடியின் பலம். ஆனல் அந்த ஆணி வேரின் பலம் பயன்பட வேண்டுமானல் அதற்கு நீர் வேண்டாமா? ஆணி வேர் இல்லாத செடிக்கு நீர் விட்டாலும் விடாவிட்டாலும் வாடிப் போகும். ஆணி வேர் உள்ள செடி நீர் விட்டால் வாடாமல்