பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பிடியும் களிறும்

தலைவன் : அதைத் தானே சொல்ல வருகிறேன்? களிறும் பிடியும் கன்றுகளும் அடங்கிய யானைக் குடும்பம் ஒன்று பாலை நிலத்தில் இருப்பதாக வைத்துக் கொள். வைத்துக் கொள்வது என்ன? உண்மையாகவே இருக் கும். தண்ணிர்கூடக் கிடைக்காமல் அவை வாடி உயங்கும். பல இடங்களிலே திரிந்து உழன்று கடைசி யில் முன்னே சொன்னேனே, அந்த இடத்துக்கு வந்து சேரும். அந்தக் குடும்பம் முழுவதும் தன் தாகம் முற்றும் தீரக் குடிப்பதற்கு அதில் தண்ணிர் ஏது? மிகக் குறைவாகவே இருக்கும். ஆழமான நீர் முன்பு இருந்த இடந்தான் அது. ஆனல் இப்போது இருப்பது சின்னீரே. அதைக் கண்டவுடன், யானே க்குட்டிகள் பரக்கப் பரக்க ஒடும். அந்தப் பள்ளத்திலே இறங்கும். அமைதியாகக் குடிக்கு மா என்ன? உடுக்கைப்போன்ற தம் அடியினலே அந்த நீரைக் கலக்கும். இளங்கன்று அல்லவா? விளேயாட்டுப் புத்தி. மெல்லிய தலையை யுடைய கன்று கள் அவை. வெப்பத்தினுல் அந்தத் தலை கொதித்துப் போயிருக்கும். ஆகவே, அவை குடிக்கட்டும் என்று உடன் வந்த பிடியும் களிறும் பார்த்துக் கொண்டே இருக்கும். தண்ணிரை எடுத் துக் கன்றுகளின் கயங் தலையிலே (மென்மையான தலை யில்) தடவும். தம்முடைய கன்றுகள் நீரை வீணுக்கு கின்றனவே என்று பிடியும் களிறும் எண்ணுவதில்லை. இவ்வளவு நேரம் அவை தவித்த தவிப்பைக் கண்டு மனம் நொந்து போயிருந்தவை அந்த இரண்டும். இப்போது தண்ணிரைக் கண்ட ஆனந்தத்தால் தப்புத் திப்பென்று காலை வைத்துக் குதிக்கின்றன, இதைத் தடை செய்யவேண்டாம் என்று அவை எண்ணுவது தானே அன்புக்கு இயல்பு? தலைவி : கன்றுகள் மட்டும் நீருண்டால் போதுமா?

தலைவன் : துடியடியினல் கன்றுகள் க லக்கிய சிறிதளவு நீரை அவை குடித்த பிறகு பெரிய யானைகள் உண்ணத்