பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 57

தலைவன்: நிழல் இல்லாமல் அலைந்து கொண்டே இருக்கும் மான்களில் ஒன்று ஆண்மான்; மற்ருென்று பிணே! மென்மை வாய்ந்த பெண்மான் அது, மடப்பின; அது மிகவும் வாடிப் போகும். நிழலில்லாத பொட்டலில் எங்கே நிழல் கண்டு ஒதுங்குவது? ஆண்மான் படாத பாடு படும், எப்படியாவது ஒரு மரத்தடியைக் கண்டு தன் காதற் பிணையை அதன் கீழ் நிற்கச் செய்யலா மென்று. ஆனல் பாலை நிலத்தில் அது முடிகிற காரியமா? -

தலைவி. என்னதான் செய்யும்? சொல்லுங்கள். அது படுகிற பாட்டைக் காட்டிலும், அதைத் தவிக்கவிட மனமில்லாமல் நான் படுகிற பாடு அதிகமாக இருக் கிறது, என்ன ஆயிற்று? சொல்லுங்கள்.

தலைவன்: நிழலில்லாமல் வருந்திய மடப்பிணைக்கு ஆண் மான் தன் நிழலைக் கொடுத்துப் பாதுகாக்கும். எந்தப் பக்கமாகத் தான் நின்ரு ல் அதன்மேல் நிழல் படுமோ, அப்படி நின்று, அதை அருகிலே நிறுத்தித் தன் நிழ லும் பரிசமும் அதற்குக் கிடைக்கும்படி செய்யும்; எத் தனை அன்பு, பார்த் தாயா?

இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்

- |தனரே.

தலவி : பிடியூட்டிப் பின் உண்ணும் களிறு காட்டிய காதல் பெரிதென்பேன? ஆண் புறவு தன் சிறகால் பெண்புறவின் வெம்மையைக் காத்த காதல் பெரி தென்பேன? மடப்பி ைக்குத் தன் நிழலை அளித்த மானின் காதல் பெரிதென்பேஞ? ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறதே! களிறு பிடியை ஊட்டின பிறகு தானும் உண்டது; அதனல் அதற்குச் சிறிது நன்மை