பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 59

சொல்வது?’ என்று அவள் உள்ளத்தினுள்ளே எண்ணி எண்ணி மறு கிளுள். மகிழ்ச்சியும் ஊக்கமும்கொண்டு அவளுடன் கலந்து பழகிப் பொழுதுபோக்க வேண்டிய வள் அவள். அத்தகைய தோழி, 'இவளுக்கு ஆறுதல் கூறுவது எவ்வாறு?’ என்ற சிந்தனையுள் ஆழ்ந்தாள்.

உண்மையில் தலைவியை ஆற்றுவிக்கும் அவசியமே இல்லையே! அவளுக்குத் தெரிந்த அளவு சமாதானம் தோழிக்குக்கூடத் தெரியாதே!

தோழி எப்போதும் போல் மகிழ்வோடு இராமைக்குக் காரணம் என்ன என்று தலைவி இப் போது ஆராயத் தொடங்கினுள். தன் பொருட்டே அவள் அப்படி இருக்கிருள் என்பதை அவள் உணர்ந்த போது வியப்படைந்தாள். நான் கவலைப்படாமல் இருக்கிறேன்; அவர் நிச்சயம் உரிய காலத்தில் வந்து விடுவார் என்ற உறுதியோடு இருக்கிறேன். இவளோ நான் கவலைப் படுவேனே என்று மறுகுகிருள். என்ன பேதைமை!’ என்று எண்ணிஞள். உண்மையை அவளுக்கு

உணர்த்த வேண்டுமென்று விரும்பினுள்.

தலைவி : தோழி, பளபளப்பான அணிகளே அணிந்திருக் கிருய், வயங்கும் இழைகளை உடையவளே! உன் முகம் மாத்திரம் ஏன் இப்படி வாடியிருக்கிறது?

தோழி : தலைவர் சென்று பல நாட்களாயின. அதை

நினைக்கும்போது மனம் அல்லற்படுகிறது.

தலைவி : அடி பைத்தியமே! நான் அல்லவா அல்லலுற வேண்டும்? அவர் வருவாரோ, வர மாட்டாரோ என்று ஐயமுறுகிருயா?

தோழி : வந்தால் எல்லாக் கவலைகளும் ஓடிவிடும். உரிய

காலத்தில் வராவிட்டால்...?