பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பிடியும் களிறும்

தலைவி : நீ ஏன் அப்படி நினைக்கிருய்? எனக்கு அவர் வந்து

விடுவார் என்ற துணிவு இருக்கிறது.

தோழி : asiar

தோழிக்கு அவள் பேச்சைக் கேட்டு ஆச்சரியந்தான் உண்டாகிறது. யாருக்காக அவள் கவலைப்படுகிருளோ, அவளுக்கு வருத்தம் இல்லையென்ருல் வியப்பு உண்டா காதா?

தலைவி : ஆம்; அவர் வந்து விடுவார் என்றே துணிந்து சொல்கிறேன். ஏன் தெரியுமா? அவர் என்னிடம் பொருளின் உயர்வைச் சொல்லிப் பிரிந்தார். அரியன வாகிய அறங்களை மேற்கொண்டு, அருள் செய்து நம்பால் வந்த துறவியருக்கு வேண்டியவற்றை அளித்துப் புண்ணியம் ஈட்டும் செயல் பொருளினலே வரும். பெரிதாகிய பகையை வென்று நம்மைப் பேணுமல் இருப்பவரைத் தெறுதலும் அப்பொரு ளாலே உண்டாகும். அவற்றிற்குமேல்,மனம் விரும்பிப் பொருந்திய காதளிஞல் அமையும் இன்பமும் அதனல் விளையும். இவ்வாறு சொல்லி, அந்தப் பொருளை ஈட்டு வதற்குப் பிரிய வேண்டும் என்று தீர்மானம் செய்து, அதன்படியே பிரிந்து சென்ற காதலர்,வருவாரென்றே தோன்றுகிறது; இதைத் துணி வாகவே சொல்கிறேன்; அதற்குரிய காரணங்களே இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.

அரிதாய அறன்எய்தி

அருளியோர்க்கு அளித்தலும்

பெரிதாய பகைவென்று

பேளுரைத் தெறுதலும்,

புரிவுஅமர் காதலிற்

புணர்ச்சியும் தரும்எனப்