பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி

தலைவனும் தலைவியும் ஒருவரும் அறியாமல் களவுக் காதல் புரிந்து வந்தனர். தலைவியின் உயிர்த் தோழி மாத்திரம் அவர்களுக்குத் துணையாக இருந்தாள். பல காலம் ஒருவரும் அறியாமல் காதலர் இருவரும் சந்தித்து அளவளாவுவதில் பல இன்னல்கள் இருந்தன. ஆதலால் காதலியை முறைப்ப்டி மணம் புரிந்துகொண்டு உலகறிய இல்லறம் நடத்துவதே சிறந்தது என்று தலைவன் உணர்ந் தான். சான்ருேரைத் தலைவியின் வீட்டுக்கு அனுப்பி மணம் பேசும்படி ஏற்பாடு செய்தான்.

சான்ருேர் மங்கலப் பொருளுடன் தலைவியின் வீட்டுக்குச் சென்ருர்கள். அவளுடைய தந்தையைக் கண்டு, வந்த காரியத்தைத் தெரிவித்தார்கள். தலைவியின் தந்தையும் தமையன்மாரும் தாயும் தங்களுக்குள் யோசித் தார்கள். அயல் ஊரினளுகிய தலைவனுடைய நிலையைப் பற்றிய செய்திகள் அவர்களுக்கு அதிகமாகத் தெரியா. அதளுல் அவர்கள் தம் பெண்ணை அவனுக்குக் கொடுக்க இணங்கவில்லை. தாம் நன்கு அறிந்த குடும்பத்தில் கொடுக்கலாம் என்பது அவர்கள் எண்ணம். அந்தத் தலைவனுக்கும் அவர்கள் பெண்ணுக்கும் பிரிப்பதற்கு

அரிய காதல் நிலவுவதை அவர்கள் அறியவில்லை.

தலைவன் மணம் பேச விடுத்தபோது, அவர்கள் மறுத்த செய்தி அவனுக்கும் தலைவிக்கும் தோழிக்கும் மிக்க ஏமாற்றத்தை உண்டாக்கியது. காதல் என்பது என்ன தினையா, வரகா, எந்தப் பானையிலும் போட்டு வைக்கலாம் என்பதற்கு? அவர்களிடையே அமைந்த காதல், உள்ளம் ஒன்றிய காதல்; உயிரோடு இன்த்த