பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பிடியும் களிறும்

காதல்; பிறவிதோறும் வரும் காதல். அவர்களுடைய காதல் வாழ்வுக்கு இடையூறு நேர்ந்தால் பிறகு வாழ் வதிற் பயனில்லை; சாதலே இனிதாகிவிடும். இவற்றை யெல்லாம் தலைவியைப் பெற்றவர்கள் எங்கே அறியப் போகிருர்கள்?

"இனி என்ன செய்வது?’-இதுதான் தலைவன் தலைவி யர் உள்ளத்தே எழுந்த கலக்கம். ஒருவரும் அறியாமல் தன் காதலியை அழைத்துக் கொண்டு தன் ஊருக்குச் சென்று அங்கே தலைவன் அவளே மணந்து கொள்ளலாம். அப்படிச் செய்தால் தலைவியின் கற்பும் அவ்விருவருடைய காதலும் பயனடையும். அவ்வாறு அழைத்துச் செல்வது புதிது அன்று; எங்கும் நடப்பது தான்.

தோழியுடன் தலைவி யோசனை செய்தாள். தலைவ ருக்கும் உனக்கும் தொடர்பு உண்டு என்பதை நம்ம வர்கள் உணரவில்லை. தாம் செய்த காரியத்தால் உன் கற்புக்கு ஏதும் வரும் என்பதையும் அவர்கள் தெளிய வில்லை. ஆகவே, அவர்கள்மேல் பிழை ஏற்றுவது தக்கது அன்று' என்று தோழி சொன்னுள்.

"அவர்கள் செய்தது சரியென்று சொல்கிருயா?” என்று கேட்டாள் தலைவி.

"அவர்கள் சரியானபடி செய்யக்கூடியவர்களே. உண்மையை உணராமையால் இந்தப் பிழையைச் செய்திருக்கிருர்கள்.'

"இனிமேல் என்ன செய்வது?’

"இப்பொழுது காரியம் ஒன்றும் மிஞ்சிப் போய்விட

வில்லை. அவர்களுக்கு உண்மை தெரிந்தால் தங்கள் முடிவை அவர்கள் மாற்றிக்கொள்ளக்கூடும்.”