பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 71

"உண்மை தெரிந்தால் தானே?"

"உண்மையைத் தெரிவித்தால் தெரிந்து கொள் கிருர்கள்.”

‘தெரிவிப்பதா? நானும் தலைவரும் களவிலே அளவளாவி வருகிருேம் என்று அவர்களிடம் சொல்வதா? அப்படி யார் சொல்வது?’

"யார் சொல்வார்கள்? நான்தான் சொல்லவேண்டும். எப்படிச் சொன்னல் நம்மேல் சினம் உண்டாகாதோ, அப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். அதற்கு ஏற்ற வழி ஒன்று உண்டு.”

'நீ தான் இவ்வளவு காலமும் எங்களுக்குத் துணையாக இருந்து எங்கள் காதல் வளரும் படி செய்தாய், இனியும் நீ தான் அதைப் பயனுறும் படி செய்யவேண்டும்’ என்று தலைவி கூறினுள்.

தோழி எப்படியாவது உண்மையைத் தம்மவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற உறுதி பூண்டாள். தலைவி யைப் பெற்ற தாயாகிய நற்ருயிடம் சொல்வதற்கு அஞ்சிள்ை; அப்படிச் சொல்வது முறையும் அன்று, அந்த நற்ருய்க்கு உயிர்த் தோழியும் தலைவியை வளர்த்தவளு மாகிய செவிலிக்குக் கூறலாம் என்று எண்ணினுள். அவள் தோழியைப் பெற்ற தாய். தன் சொந்தத் தாயிடம் அச்சமின்றி உண்மையைப் பக்குவமாகக் கூறிவிடலாம் என்று தோழி துணிந்தாள்.

ஒருநாள் தோழியும் அவளைப் பெற்ற தாயாகிய செவிலியும் பேசிக் கொண்டிருந்தார்கள். தலைவியை