சாம்பல்
17
“ஹர்ஷனை வென்றான் புலிகேசி! புலிகேசி தோற்றான் நம் பரஞ்ஜோதியிடம்!”
“படைத் தலைவருக்கேற்ற புத்தி கூர்மை, அஞ்சா நெஞ்சு அனைத்தும் படைத்த ஆற்றலரசனன்றோ நம் பரஞ்ஜோதி.”
“படைத் தொழில் நுட்பம் சகலமும் அறிந்தவர்.”
“வாதாபியின் வீழ்ச்சி...”
“வாடிக் கிடந்த மக்களைக் குதூகலப்படச் செய்துவிட்டது.”
“மற்றையத் தமிழ் வேந்தர்களும்...”
“பாராட்டுவர், வெளியே; உள்ளே பொறாமை அடைவர்”
“பயமுமிருக்கும்!”
“எங்கும் இந்த இணையில்லா வீரருக்குப் பெருமதிப்புத்தான்!”
“மக்கள், பரஞ்ஜோதியை...”
“வணங்குகிறார்கள்!”
“மன்னருக்கும் அவரிடம் அளவு கடந்த மதிப்பு!”
“இராதா? ரணகளச்சூரன்! வெற்றி வீரன்! வாதாபிக்குத் தீயிட்ட தீரன்! மகேந்திர மன்னன் தோல்வியைத் துடைத்த தளபதி! மட்டற்ற மதிப்பும் மங்காப் புகழும் இந்தப் பல்லவ பரம்பரைக்குப் பெற்றுத் தந்த தலைவன்...”
“ஆம்! ஆனால்...பரஞ்ஜோதி ஒரு சைவன்!”
“ஆமாம்! சைவன்!”
“சைவன்! மன்னன் வைஷ்ணவன்! நாமும் அரிதாசர்கள்! கீர்த்தி பெற்றவனோ சைவன்!”
“ஆனால், அதனால்”