பக்கம்:பிடி சாம்பல்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாம்பல்‌

29

“அவருக்குத் தெரிந்தேதான், இவன் சைவப் பிரச்சாரத்தை இவ்வளவு துணிவாகச் செய்கிறான் போலும்.”

“பக்க பலமில்லாமல் வெளிநாட்டான் இந்த விபரீதச் செயல் புரிவானா?”

“தன்னைக் கேட்பவர் யார் இருக்க முடியும் இந்த மண்டலத்தில் என்று பரஞ்ஜோதியார் எண்ணுகிறார் போலும்.”

“வாதாபியே அழிந்தது, வைணவர் எம்மாத்திரமென்று எண்ணுகிறாரோ என்னவோ?”

“சைவன் நான்—என் நாட்களிலே, அரசாங்க மதமாகச் சைவம் திகழ்வதுதான் முறை என்று கருதுகிறார் போலும்.”

மன்னனின் செவியில் விழும்படி மட்டுமல்ல, மக்களிடம் பரவுமளவு, விதவிதமாகப் பேசலாயினர், மேலே குறித்துள்ளபடி. சாளுக்கியன் பூரிப்படைந்தான். தீ பரவுகிறது என்றெண்ணி வெற்றிப் பாதையிலே விரைந்து நடக்கலானான். தான் கையாள ஆரம்பித்த முறை பலிக்கிறது என்று தெரிந்ததும், வில்லாளன், அதைத் தொடர்ந்து நடத்தலானான்—அவன் மட்டுமல்ல—அவன் துவக்கினான், பல சைவர்கள், அவனைத் தொடர்ந்தனர். எங்கும் சைவத்தின் மேன்மையைப் பற்றியே பேச்சாகிவிட்டது. வைணவர்களின் முறையீடு, மன்னன் செவி புகுந்தது, அவன் தீவிரமாக யோசிக்கலானான்.

கைலைநாதனின் கட்டளையை உனக்குக் கூற வந்தேன்—காடு மலை வனம் கடந்து. கருத்தறியாது நீ செய்யும் காரியத்தினால், உனக்கு நேரிட இருக்கும் சர்வநாசத்தினின்றும் நீயும், உன் ராஜ்யமும், குலமும், தப்ப வேண்டுமானால், பாபத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டுமானால், நரசிம்ம மன்னனே! நமச்சிவாயத்தின் நல்லதொண்டனாம் பரஞ்ஜோதியை, நரவேட்டையாடும் பழிப்பணியிலே புகுத்தும் செயலை நிறுத்து இன்றே—இல்லையேல்—சொல்லக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/29&oldid=1765275" இலிருந்து மீள்விக்கப்பட்டது