பக்கம்:பிடி சாம்பல்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாம்பல்

55

வேவலுக்கோ, ஐசன்ஹவருக்கோ, பைபிளிடம் ஆசை; ஏசுவிடம் விசுவாசம் என்று பிறர் கூறக்கேட்டு, ஆஹா! அப்படியா! அங்ஙனமாயின் மாதாகோயில் பாதிரி வேலைக்கு, அனுப்புகிறோம் என்று, பிரிட்டிஷ், அமெரிக்க சர்க்கார்கள் கூறுமா? பரஞ்ஜோதிக்குக் கூறப்படுகிறது. ஏன்?

படைத் தொழிலில் இருப்பதால் சிவத்தொண்டு சாத்யமின்றிப் போகுமா? ஆவுரித்தித் தின்று உழல்பவனும், ஐயனை நம்பினால், அவர்களே நாம் வணங்கும் தெய்வம் என்று சைவம் கூறப் போர்த் தொழிலைக் கடமையாகக் கொண்ட பரஞ்ஜோதியாருக்கு மட்டும், ஏன் மடாலயம் புகவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டது? இவை நீங்கள் சிந்திக்க வேண்டியவை. ‘பிடி சாம்பல்’ தீட்டியதன் நோக்கம் அதுதான். ஆகவே சைவமெய்யன்பர்கள், ‘பிடி சாபம்!’ என்று சீறிடாமல், சற்றே சிந்தனையைச் செலவிடுங்கள்...முடியுமானால்!


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/55&oldid=1768024" இலிருந்து மீள்விக்கப்பட்டது