பக்கம்:பிடி சாம்பல்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

ஒளியூரில்‌

டன் பார்ப்பார்களோ, அந்தப் பார்வையிலேயே, ஆலயப் பூஜாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஸ்வாமிகளே! எப்படி க்ஷேம இலாபங்கள்?”

“இருக்கிறேன், தங்கள் யோக க்ஷேமம் எப்படியோ?”

“எல்லாம் அவ்விடம் உள்ளது போலத்தான்.”

“பகவத் கடாட்சம் எப்படியோ, பார்ப்போம்” இவ்வளவுதான் அவர்களிடையே பேச்சு—அதுவும் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, வறட்சி நிறைந்த குரலில், மிரட்சி பொங்கிடும் கண்ணினராய்.

பொன்னொளி பரப்பிக் கொண்டிருந்த காலம் அது—எனவே புரட்டர்களும், புல்லர்களும் மனம் புழுங்கிப் போயினர். புனித மார்க்கம், புராதன மார்க்கம் என்று பல காலமாகப் பக்திபூர்வமாக எந்த மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்களோ, வந்தனை வழிபாடுகளை அன்புடனும், அக்கரையுடனும் செய்து வந்தனரோ, அவர்களே ஏதோ வேண்டா வெறுப்பாக ஈடுபாடு கொண்டிருந்த காலம்.

“மன்னா!” என்று மகரிஷிக் கோலத்திலிருப்பவன் அழைத்தவுடன் அடியற்ற நெடும்பனையெனக் கீழே வீழ்ந்து, அடிபணியும் மன்னர்களின் மனப்போக்கு மாறிவிட்டது; ‘எந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவர்? என்ன கோரிவந்திருக்கிறீர்? இதற்கு முன்பு எந்த மண்டலத்தில் தங்கியிருந்தீர்?’ என்று ‘விசாரணை’ நடத்திய காலம்! இந்நிலையில்; புராண இதிகாசங்களைக் கூறிக்கொண்டு, வாழ்க்கையில் மேம்பாடு பெற, எப்படி முடியும் ரங்கராஜ பண்டிதரால்! நெஞ்சு நெக்குருகக் கேட்ட காலம், கசிந்து கண்ணீர் மல்கிய காலம், கைகூப்பித் தொழுத நாட்கள், பக்திப் பரவசத்தால் மெய் மறந்துபோய் கைத்தாளம் கொட்டி ஆடிய காலம்—இவை போயேவிட்டன—கதை என்றுகூடக் கூறத் தொடங்கி விட்டனர் மக்கள்.

ஆண்டவனுடைய லீலா விநோதங்களை விஸ்தாரமாக எடுத்துச் சொல்லும்போது, சிலர், சிரிப்பதை அடக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/58&oldid=1768903" இலிருந்து மீள்விக்கப்பட்டது