பக்கம்:பிடி சாம்பல்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இதிலே கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை பலிக்காது.

கதைக்கென்று சிருஷ்டிக்கப்படும் ஒரே ஒரு பாத்திரத்தின் நேர்முக தரிசனமே இதற்குத் தேவை.

புறப்படும் இடத்திலிருந்து அந்தப் பயணம் முடியும் கட்டத்திற்குள்ளே வந்து போகும் கிளைவழிகளுக்கெல்லாம் இதிலே இடமில்லை.

பயணத்தின் குறிக்கோளே இதற்குப் பிடித்த நைவேத்தியம்.

உணர்ச்சி மயமான சொற்களால் படிப்போர் நெஞ்சை உருகிடச் செய்யும் யுக்தியே கதைக்குரிய சிறந்த ஆராதனை.

மனித சமுதாயத்தில் இன்னமும் ஜடமாகவும் முடமாகவும் இருக்கின்ற விகாரங்களை—விவஸ்தை கெட்ட விஸ்வரூபங்களை அளந்து காட்டும் அடையாளச் சீட்டாக இது அமைய வேண்டும்.

மனித மனத்தை நிறைவு படுத்தும் வேலையை, கொஞ்சம் அழகாக எழுதத் தெரிந்த யாராலும் செய்து காட்ட முடியும். அதுவல்ல, சிறுகதை.

ஒரு மனத்தின் சேஷ்டையை மற்றொரு மனத்துக்கு எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/6&oldid=1764119" இலிருந்து மீள்விக்கப்பட்டது