பக்கம்:பிடி சாம்பல்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளியூரில்‌

61

களைப் பொறுத்தருளும்; சாசுவதமான இன்பம் பெறும் மார்க்கத்தை சர்வேஸ்வரா! எனக்குக் காட்டும்” என்று கேட்டு வந்த பக்தர்களிலே மிகப் பலருக்கு, ஆலயத்திலே காணப்படும் அலங்காரமும் ஆடம்பரமும், அர்ச்சகர்களாகி அரசோச்சும் பூசுரரின் பேராசையும் ஆதிக்க வெறியும், அவர்களைப் பற்றி ஆபாசம் நெளியும் கதைகளும் கண்ணிலும் கருத்திலும் உறுத்தின; இந்த இடத்தில் தூய்மையான கருத்து எங்ஙனம் துளிர்விடும்! வாடைக் காற்றடிக்கும் இடத்திலே மல்லிகையின் நறுமணம் தேடுகிறோம்—வீண் வேலை! என்று தோன்றிற்று.

எவ்வளவு அழகான சிலைகள்! எத்துணை நேர்த்தியாகச் சமைத்திருக்கிறான் சிற்பி. அந்தக் கண்கள் கவிதை பாடுவது தெரிகிறதே! கன்னங்கள், கனிந்த பழம் போலல்லவா உள்ளன! அதரம் துடிப்பது போலவே தோற்றமளிக்கிறது. தன் கைவண்ணத்தைச் சற்றே சரிந்த குழலின் பாரம் பின்னுக்கு இழுக்க, கனகப் பந்துகளின் கனம் முன்னுக்கு அழைக்க எப்பக்கம் என் நிலை என்று துடிப்பதுபோல் இடை நெளிய, இந்தக் காட்சியிலே சொக்கி நிற்கும் என் நாதனைக் காணீரோ என்று கேட்பதுபோல் கண் பேச, ஆஹா! கல்லைக் கொண்டு இவ்வளவு அழகாக அளித்திருக்கிறானே, பேசும் பாவையர் கண்டு காமுறத் தகும் சிலை வடிவச் சிங்காரியை. ஸ்ரீதேவி என்றழைக்கட்டும், சிவகாமி என்றுரைக்கட்டும், மீனலோசனி, விசாலாட்சி, விரூபாட்சி, கமலலோசனி என்று பெயர் எதுவேண்டுமானாலும் சொல்லட்டும்; கதை எப்படி வேண்டுமானாலும் கட்டட்டும்; கல்லிலே இந்த எழிலைக் காட்டினானே, அவனைத்தான் நான் தேடுகிறேன், புகழ் பாடிட; கொண்டாடி மகிழ.

இப்படி ‘சிலை’யிலே காணப்படும் சிற்பியின் கைத்திறனைப் புகழ்ந்தனர் சிலர்.

சீற்றம் பிறக்கவில்லை, ஆலயத்து மேலோருக்கு. அவர்கள் பக்திப் பரவசத்தால் கனிவுவழிய தரிசிக்கிறார்கள் என்று எண்ணி, தேவ மார்க்கம் தழைத்து நிற்கும், புத்த புயலிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/61&oldid=1768912" இலிருந்து மீள்விக்கப்பட்டது