பக்கம்:பிடி சாம்பல்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஒளியூரில்‌

வீழ்ந்து போகாது, சிறிதளவு தாழ்ந்து போக நேரிடலாம். ஆனால் அடி பெயர்ந்திடாது—இதோ வைத்த கண் வாங்காது நிற்கிறார்களே, இவர்களெல்லாம் புராதன மார்க்கம் புதுமுறைக்காரர்களால் அழிக்கப்படுவதற்கு இடமளிப்பார்களா? ஒருபோதும் இல்லை!—என்றெண்ணினர், மகிழ்ச்சிபெற்று, மலரால் மகேசனை அர்ச்சித்தனர், பிரசாதமளித்து மகிழ்வித்தனர் பிறரை.

தேவனைத் தரிசிக்க வந்தனர் பக்தர்கள் என்று அர்ச்சகர்கள் எண்ணிக் கொண்டனர். வந்தவர்களோ ‘சிலை’யைக் கண்டு களித்திடும் கலா ரசிகர்கள், பூஜை செய்கிறார்கள் என்று பூஜாரிக் கூட்டத்தினர் எண்ணிக் கொண்டனர். சிலையை ரசித்தவர்களோ, சிற்பியைப் புகழ்ந்துரைத்தனர். அருள்பெறும் இடம் என்று கூறி ஆலயத்துக்கு அழைத்தால், அழகொழுகும் கலைக்கூடம் இது என்று கூறிப் பாராட்டினர். ரசிகர்களைப் பக்தர்கள் என்று எண்ணிக் கொண்டவர்;—ஏமாந்தனர்.

ஆரிய மார்க்கம் இங்ஙனம் அடித்தளம் தாக்குண்ட நிலையில் இருந்த காலத்தில் ரங்கராஜ பண்டிதருக்குத் தொழிலில், பொருளும் புகழும் மிகக் குறைந்த அளவுக்குத்தானே கிடைக்க முடியும்.

புத்த மடாலயம் சென்றுவிட்டவர்கள்—நிராசை—நிர்வாணம்—நிர்மலம் எனும் இலட்சிய சித்திக்கான முறைகளிலே ஈடுபட்டனர்—புத்த மடாலயம் சேராதவர்களும், புத்த மார்க்கத்தில் புகாமலும், புத்த மார்க்கப் பிரசாரமூலம் பெற்ற தெளிவினால், ஆரிய மார்க்கத்திலே உள்ள ஆபாசங்களை அறிந்து கொண்ட ‘இந்துக்கள்’ ரங்கராஜ பண்டிதரின் கதைகளைக் குறித்து அவரைக் கேட்ட கேள்விகள் அவருக்குக் கோபமூட்டின. கேள்விகள் தவறானவை என்பதால் அல்ல; பதில் கண்டறிவது கடினமாக இருந்தது. கடுங்கோபம் பிறந்தது பண்டிதருக்கு, எனினும் தனியே இருந்து, அதே கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும்போது அவருக்குச் சிரிப்புக்கூட வரும். ஆமாம்! அந்தப் போக்கிரியப் பயல்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/62&oldid=1768914" இலிருந்து மீள்விக்கப்பட்டது