பக்கம்:பிடி சாம்பல்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஒளியூரில்‌

அவள் சிணுங்கினாள். வண்ணப்பூ மேனிக்கு இந்த வான்காற்று ஆகாது; பண்ணொத்த மொழியாளே! வாராய் இங்கு என்று அழைத்து, நீண்ட இரு கையைப் போர்வையாக்கி, பிறை நெற்றிக்கு முத்தமெனும் பொட்டிட்டு, வெட்கத்தால் முகம் சிவக்க ‘விடுங்கள்’ என்றே வீணைமொழியிலே அவள் கூறும்போது, தலைசாய்த்து துயிலுவதற்குத் தக்கதன்றோ, எந்தன் தடந்தோட்கள் என்றே மிக்கவும் கோபமது கொண்டான் போலே அவனும் கேட்க, மஞ்சமிதை வேறு அஞ்சுகமும் கொள்ளட் போமோ! என்று அவள் கூறி நெஞ்சம் நிறைந்துள்ள இன்பத்தேனை, அதரம் தன்னில் வைத்து, மகிழ்வூட்டி மகிழ்கின்றாளே, அங்கு அல்லவா தெரியும், பண்டிதர், தன் மகளுக்கு எழிலூட்டப் பொன்னையும் பொருளையும் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை என்னும் பேருண்மை.

‘கொண்டலைத் தழுவிடும் மேகம்; கூறுவதென்ன கோகிலமே!’ என்று அவன் கேட்கிறான்; அவள் காதற்புலமையுடன் “தழுவிடச் சென்ற மேகமங்கை, பின்னர் அழுதிடும் காரணம் அறிவீரோ?” என்றல்லவா கேட்கிறாள்! செல்வம் நிரம்ப இருந்தால் வாசமல்லிகாவின் திருமணத்தை மிகச் சிறப்பாக, கோலாகலமாக நடத்தலாம்; அதற்கான காலமா இது? இல்லையே என்று ஆயாசப்படுகிறாரே இந்தப் பண்டிதர். இதோ, வண்டுகள் யாழை மீட்ட, வரிக்குயில் பண்ணிசைக்க, அண்டையில் அருவி பாய்ந்து அழகாய் முழவொலிப்ப, கெண்டைகள் துள்ளியோடிக் கேளிக்கை நடத்திக்காட்ட, வெண்முகில் கருத்துப் பன்னீர்த் துளிகளை வாரிவீச, வாசமல்லிகா—ராமப்பிரசாதன் கடிமணம், பல ஆயிரம் வராகன்களைக்கொட்டிச் செலவிட்டாலும் பெறமுடியாத அழகுடன் நடைபெறுகிறது. பண்டிதர் இதனை அறியாமல், பணமில்லை பணமில்லை என்றெண்ணிப் பதைக்கிறார். பேழைக்கல்லவா, பணம் தேவை! இந்த ஆணழகன் தேடுவது, இந்த வடிவழகை, வண்ணமலரை, மண்ணகத்து மதியை, பொன் அவிர்மேனியாளை, புது வாழ்வை! வாசமல்லிகா கிடைக்கும்போது, அவன் அவளுடன் வந்துள்ள பேழைகள் எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/64&oldid=1769538" இலிருந்து மீள்விக்கப்பட்டது