7
அந்த மனத்தின் கசிவைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் அது பொருந்தி இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட கதையைத்தான் ‘சிறுகதை’யாகக் கொள்ள முடியும்.
காலத்துக்கேற்ற மாதிரி —சூழ்நிலைக்குத் தகுந்த விதத்தில் எந்த ஒரு பூவும் தன் நிறத்தை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதருக்கு புத்தி சொல்லக் கிளம்பும் சில புஸ்வாண எழுத்தாளர்கள் மட்டும் உடையை மாற்றிக்கொள்வது போல மனத்தை மாற்றிக் கொண்டு, எழுதுவதையெல்லாம் ‘கதை’ என்று கதைக்கின்ற இந்தக் காலகட்டத்தில், உங்கள் கரங்களில், உண்மையான-உயிருள்ள கதைகளைச் சிருஷ்டித்த பெருமைக்குரிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறுகதைத் தொகுப்பை, ‘பிடி சாம்பல்’ என்னும் தலைப்பில் தவழவிட்டிருக்கிறோம்.
மனித சமுதாயத்துக்கு அவசியமாகத் தேவைப்படும் ஒன்றை, அது எங்கு பிறந்திருந்தாலும் அதைச் சுவீகாரம் கொள்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் ‘சிறுகதை’ என்பது சுவீகாரக் குழந்தைதான். அதுவும் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட குழந்தை அது.
அந்தக் குழந்தையை அமரர் அண்ணா அவர்கள், தம் கரத்தில் ஏந்தித் தவழவிட்டி-