பக்கம்:பிடி சாம்பல்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஒளியூரில்‌

“ரங்கராஜா! என்ன அவசரமான முடிவுக்கு வருகிறாய்? பூபதியார் நலந்தா சென்று ஊழியம் செய்வதாகச் சொன்னாரே தவிர, புத்தமார்க்கம் புகுந்துவிடுவதாகவா கூறினார்? அங்குதான் இப்போது ஆரிய மார்க்கமும் இருக்கிறதே—சேவை செய்வது என்றால், சகலமும் உணர்ந்த பூபதியார், ஆரிய சேவை செய்கிறார் என்பதுதானே பொருள். இப்போது, யாகம்கூட அங்கு நடத்தப்பட்டு வருகிறது. பூபதியார் போன்றவர்கள், ஆரியரின் புனித கைங்கரியத்துக்குத் தம்மாலான பேருதவி புரிந்துதான் வருகிறார்கள்” என்று பராசரஸ்வாமிகள், சாகசமாகப் பேசினார். பூபதியாரோ, “மன்னிக்க வேண்டும். நான் புத்த மார்க்கத்திடம் பற்று கொண்டுவிட்டேன்” என்றார்.

“அப்படியானால், திருமணம்?” என்று ஆத்திரமாகச் கேட்டார் பண்டிதர்.

“விரைவில் நடத்திவிட்டுத்தான் நான் நலந்தா செல்வதாக உத்தேசம்.”

“திருமணத்துக்குச் சம்மதிக்க மாட்டான், என் மகன். அவன் மகா உத்தமன்—நமது பூர்விக மதத்தில் நிரம்பப் பற்று கொண்டவன்...”

“வாசமல்லிகாவை அல்லவா அவன் திருமணம் செய்து கொள்ளப்போவது—என் நிலைபற்றிக் கவலை என்ன?”

பண்டிதரை, ஸ்வாமிகள் அதிகம் பேச இடமளிக்கவில்லை.

“தீர்க்காலோசனைக்குக் காலம் கொடு, பூபதியாரே! திடீரென்று தாக்காதீர்” என்று கூறி அனுப்பிவிட்டார்.

லந்தா பிரச்சினை நந்தவனத்திலே, புயலையும், புனலையும், கனலையும் கிளப்பிவிட்டது.

செல்வம் போய்விடுகிறதே என்பதுதான், தங்கள் தகப்பனாரின் கோபம்; வருத்தம், வேறென்ன? என் அப்பா புத்த மயத்தில் சேர்ந்தால் இவருக்கு என்னவாம்! இவரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/72&oldid=1769546" இலிருந்து மீள்விக்கப்பட்டது