பக்கம்:பிடி சாம்பல்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஒளியூரில்‌

கொண்டது என்று தோன்றுகிறது. உடனே அவரைத் தொலைத்துவிடுவதுதான், உங்கள் தர்மமோ? என்னைக் காதலித்து வந்தீரா அல்லது என் தந்தையின் பேழையைக் காதலித்து வந்தீரா என்றுகூடத்தான், எனக்கே இப்போது சந்தேகம் ஏற்படுகிறது.”

“ச்சீ! துஷ்டை! துராத்மா! விலகிச் செல்!”

இவ்விதம் ஊடல், மோதுதலாகவே மாறலாயிற்று.

பூபதியார், நாளுக்கு நாள் அமைதியை அதிகமாக மேற்கொண்டவரானார், புத்தமத ஏடுகளைப் படிப்பதும்—ரசிப்பதும்—பொருள் விளங்காதபோதெல்லாம் நலந்தா சென்று பாடம் பெறுவதுமாகவே காலங் கழித்து வந்தார்—வாணிபம் அறவே நின்றுவிட்டது.

“நேற்றுவரை இவரிடம் கணக்கு எழுதி வந்தவன், இன்னும் சில ஆண்டுகளிலே கோடீஸ்வரனாகப் போகிறான்” என்று கூறி வருந்தினான் பிரசாதன்.

“தந்தையின் செல்வம் போய்விட்டால், என் இளமையும், அழகும் கூடவே போய்விடாது” என்றாள் மல்லிகா.

“அது ஏன் போகும்! என்னை மயக்க அது இருத்து கொண்டுதான் இருக்கும்” என்றான் பிரசாதன்.

“நான் மயக்குபவளா?”

“அதிலென்ன சந்தேகம்?”

“அப்படிப்பட்டவளிடம் உமக்கு ஏன் பாசம்—நேசம்?”

“பாழும் மனம் கேட்காததால்...”

“படுகுழி என்று தெரிந்து ஏன் விழவேண்டுமோ?”

“காதலுக்குக் கண் ஏது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/74&oldid=1769548" இலிருந்து மீள்விக்கப்பட்டது