பக்கம்:பிடி சாம்பல்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளியூரில்‌

75

“காதகனைக் கண்டறிய எனக்குக் கண் இருக்கிறது. இனி என்னைச் சந்திக்க, இந்தப் பொழிலுக்கு வரவேண்டாம்.”

“சந்திக்க வேண்டாம் என்று சொல்லு—பொழிலுக்கு வரவேண்டாமென்று சொல்ல நீ யார்?”

பொழிலுக்குப் போவதை வாசமல்லிகா நிறுத்திக் கொண்டாள்.

ராசர ஸ்வாமிகள் அடிக்கடி வந்துபோனவண்ணமிருந்தார்; ரங்கராஜ பண்டிதர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை; ஏதோ தீவிரமான சிந்தனையில் மூழ்கிக் கிடந்தார். மாதங்கள் உருண்டோடின. காதல் முறிந்தே விட்டதென்று ஊரார் பேசிக் கொண்டனர். உகுத்திடும் கண்ணீர், வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வாசமல்லிகா வெகு பாடுபட்டு வந்தாள். ஆனால், அதற்குள் இவைகளைக் கவனிக்கும் நிலையைக்கூடப் பூபதியார் தாண்டிவிட்டார். நலந்தாவுக்கு நாள் தவறாமல் எதையாவது ‘நன்கொடை’யாகத் தருவார்; வாசமல்லிகா முகம்கூடக் கோணுவதில்லை.

“மல்லிகா! நமது தொழுவத்தில் இருக்கிற பசுக்கள்—அதிகம்—அல்லவா?”

“ஆமாப்பா...”

“நலந்தாவுக்கு...?”

“அனுப்புங்களேன்...அங்கு உள்ளவர்களுக்கும் பயன்படும்...”

ம்மா, மல்லிகா! மகர கண்டிகை விற்று பணமாக்கிவிட்டேன்; நீதான் அதை இப்போதெல்லாம் அணிந்து கொள்வதில்லையே.”

“ஆமப்பா, எனக்கு அம்மாதிரி நகைகள் பிடிக்கவில்லை.”

“அப்படியா மகளே! குணவதியல்லவா நீ பணத்தை.”

“நலந்தாவுக்கு அனுப்பிவிடுங்களப்பா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/75&oldid=1769549" இலிருந்து மீள்விக்கப்பட்டது