வீழ்ச்சி
87
வீசி, தஞ்சைத் தரணியை முன்னமோர் நாள் பிணக்காடு ஆக்கிற்று!
தஞ்சை செல்வோம்—ஆண்டு 1673! ஆள்பவர், வேந்தன் விஜயராகவன்!!
தஞ்சைத் தரணி மட்டுமல்ல, தமிழகமே வைதீக ஆரியமார்க்கத்துக்கு இரையாகிவிட்டிருந்தது—எனவே, புரோகித வகுப்பாருக்கு, அளவுகடந்த செல்வாக்கு. வீரத்தாலல்ல, பக்தியினால்தான். மன்னர்கள் புகழ் தேடுவது என்ற முறை வலுத்துவிட்ட காலம் அது. இத்தனை களம் கண்டான், வீரப்போரில் ஈடுபட்டு இவ்வளவு தழும்புகளை உடலில் பெற்றான் என்று மன்னர்களைக் குறித்துப் புலவர் பெருமக்கள் வியந்து பாடும் காலம் அல்ல—இன்னின்ன கோயில்களைக் கட்டினான்—இலட்சம் பிராமணர்களுக்கு அன்னதானம் அளித்தான் என்று பிராமணோத்தமர்கள் பாராட்டிப் பேசி, ஆசீர்வாதம் செய்துவந்த காலம்.
மன்னர் மகனுக்கு ‘அட்சராப்பியாசம்’ (கல்வி துவக்கம்) நடக்கும். நவரத்னங்களைக் கொட்டி, அதைக் கொண்டு, அரசகுமாரனை, ஒரு அந்தணர் எழுத வைப்பார்! பிறகு நவரத்னங்கள், அந்தணர்களுக்குத் தானமாகத் தரப்படும். அப்போதுதான், அரசகுமாரன் புத்தியில் ‘பிரகஸ்பதி’யாக வேண்டும் என்று பிராமணர்கள் ஆசீர்வாதம் செய்வர்!
கும்பகோணம் இராமர் ஆலயம், கும்பேஸ்வரர் கோயில், திருவையாறு ஜம்புசேகர் தேர், பசுபதி கோயிலில் தேனுகேசுரர் மண்டபம், மன்னார்குடியில் மணிமண்டபம்—இப்படித் திருப்பணிகள் செய்வர், மன்னர்கள்—மறையவர் வாழ்த்துவர்—மகேசன் அருள் பாலிப்பார்!
துலா புருஷதானம்—ஸ்வர்ண கோதானம்—பூதானம் இப்படிப் பலப்பல!
அந்தணர் அகமகிழ இவைகள்—மன்னர் மன்மகிழ்ச்சிக்காக அரண்மனை, கலைக்கூடமாக்கப்பட்டு விளங்கிற்று. கல் பேசும் சிற்பியின் திறத்தால்! கலை, துடியிடையாக,