பக்கம்:பிணங்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிணங்கள்

93


கல்யாணம் நடப்பதற்கு முன், காய்ச்சலாகப் படுத்திருந்த நாயகியிடத்திலே, “நாயகி! நாலு நாள் காய்ச்சலிலே மெலிந்து விட்டாயே… மருந்தும், டானிக்கும் சாப்பிடு” என்று சொன்னதற்கு… உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே, இரத்தம் என் உடம்பில் ஊறுமே என்று சொன்ன நாயகி, இன்று என்னை உதாசீனம் செய்து விட்டு வாழ்கிறாளே, இதுவா காதல்?

“காதலுக்கும் கடவுளுக்கும் பேதமில்லை” என்பார்கள்! உண்மைதான். எப்படி இல்லாத கடவுளை இருப்பதாகக் கூ.றி, அதற்கு ஆலயங் கட்டி, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்களோ, அதைப் போலத்தான் இல்லாத காதலை, அழகுபடக் கூறி, கண்ணிலே மண்ணைத் தூவுகிறார்கள்.

இப்படி ஏதோ சொல்லி, நாகராஜன் புலம்ப முடிந்ததே தவிர, வாழ முடியவில்லை, பிச்சை எடுத்தான்; வீதியிலே படுத்தான்.

இந்தச் சமயத்தில்தான் தைப் பொங்கல் வந்தது. பட்சியினங்களுக்காவது வெண் பொங்கல் கிடைத்தது. நாகராஜனுக்கு அன்றைய உணவுக்கே பஞ்சம்.

இதே பொங்கல் திருநாளில், ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம்! ஆனால் இன்று…? நடைப்பிணம். நாளையோ, மறுதினமோ மரணம்!

அன்று இரவு, கையிலே கிடைத்த பிச்சைக் காசுடன் ஒரு குடிசையில் நுழைந்தான் நாகராஜன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிணங்கள்.pdf/94&oldid=1743044" இலிருந்து மீள்விக்கப்பட்டது