8
பித்தளை அல்ல,
அப்பாசாமி, முப்பது வருஷங்களாக ஒரே இடத்தில் ஒழுங்காக, நாணயமாக வேலை செய்து அடக்கமானவர் என்று பெயரெடுத்தவர். எட்டு ரூபாய் சம்பளத்தில் துவங்கி, அறுபது ரூபா வாங்கும் நிலைக்கு வந்திருக்கிறார், எளிதாக எவரையும் நம்பாத எம்பெருமாள் செட்டியாரிடத்தில்.
முதல் மனைவி, முத்து, மாணிக்கம் என்ற இரண்டு செல்வங்களை தந்துவிட்டு, மறைந்துவிடவே, அப்பாசாமி வள்ளியை இரண்டாந்தாரமாகக் கொள்ளவேண்டி நேரிட்டது. எத்தனையோ நல்ல நல்ல இடமெல்லாம் வந்தது. எங்க அப்பன் வக்குவகை இல்லாம, என்னை இரண்டாந்தாரமாகக் கொடுத்து விட்டாரு என்று வள்ளி, கோபமாக இருக்கும்போதெல்லாம் குறைகூறிப் பேசுவதுண்டு. அப்பாசாமி,அவள் சொல்வதிலே உண்மை இருக்கிறது என்று மனதுக்குள் எண்ணிக் கொள்வார். வள்ளியின் பெண்தான் எட்டு வயது பட்டு. அந்தப் பட்டுவுக்குத்தான் முத்துவிடம் அவ்வளவு பாசம்.
"அண்ணாத்தை! வா! அப்பா,இல்லை; வா,சும்மா!" என்று வரவேற்கும் குரலே பட்டுவுடையதுதான்.
“அக்காவுக்குக் கூட உன் பேர்லே கோவம் அண்ணாத்தை. என்னைக்கூட, உன்கூடப் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்குது" என்று 'சேதி' சொல்லுவதும் பட்டுதான். பட்டுவை ஒரு நாள் பார்க்காவிட்டால்கூட, முத்துவுக்கு மனது சங்கடமாக இருக்கும். அவ்வளவு அன்பு வைத்து இருந்தான், அந்தச் சிறுமியிடம். வள்ளியால் ஆனமட்டும் மிரட்டிப் பார்த்தாகிவிட்டது; அடித்தும் பார்த்தாகிவிட்டது. பட்டு கட்டுப்படவே இல்லை. முத்துச்சாமியின் குரல்கேட்ட உடனே துள்ளிக் கொண்டு ஓடிப்போய், அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு வருவாள். முத்துவுக்கும், அந்தக் குடும்பத்திற்கும், தொடர்பு அடியோடு அறுபட்டுப் போகாமலிருந்ததே, பட்டு காட்டி வந்த பாசத்திலேதான்."
முத்துச்சாமி படிப்பிலே நாட்டம் காட்ட முடியாது போகவே, தச்சுத் தொழில், அச்சுத் தொழில், கட்டடத் தொழில் என்று பலவற்றிலே நுழைந்தான். எந்த இடத்திலும்