12
பித்தளை அல்ல,
ஆகவே முத்துச்சாமி கெட்டுப் போவதைத் தடுக்கதக்க சூழ்நிலை ஏற்படவில்லை. பட்டுவுக்காக மட்டுமே முத்து வீட்டுக்கு வருவான். ஏதாகிலும் விளையாட்டுச் சாமான்,தின்பண்டம் கொடுத்துவிட்டுப் 'போய்விடுவான். இதைத்தடுக்கப் பார்த்து, முடியாது என்பதால்,விட்டுவிட்டாள் வள்ளி. மேலும், முத்து கொண்டு வந்து கொடுத்த விளையாட்டுச் சாமான்கள் நன்றாகவும் இருந்தன! போக்கிரி!ஊர் சுற்றி!வீட்டுக்கு அடங்காதது என்று பெயரெடுத்தானே தவிர முத்து திருடன் என்ற பெயர் மட்டும் எடுத்ததில்லை.வள்ளி மட்டும் கோபம் அதிகமாகும்போது கூச்சலிடுவாள்."அது திருடிவிட்டு ஜெயிலுக்குப் போகா விட்டா என் பேரை மாத்தி வைச்சிக்கறேன், பாரு. நீ வேணும்னா" என்று.
வேலை வெட்டி ஒழுங்காகச் செய்யாமல், வீட்டுக்கு அடங்காமல் இருந்து வந்த முத்து, எம்பெருமாள் செட்டியார் வீட்டில் நாலு தங்க வளையல்கள் திருடிவிட்டு, பிடிபட்டு ஜெயிலுக்குப் போனதுபற்றி, அந்த ஊரில் யாரும் ஆச்சரியப்படவில்லை. அப்படித்தான் நேரிடும் என்று ஊர் பேசிற்று.முத்துவும் குற்றத்தை மறுக்கவில்லை.
"திருடினதை ஒப்புக் கொள்கிறாயா?"
"ஆமாம்; திருடினேன்"
"ஏண்டா, திருடினே?"
"என்ன கேள்வியய்யா இது? எப்படித் திருடினேன்னு கேட்டாலும் அர்த்தம் இருக்கும். ஏன் திருடினேன்னு ஒரு கேள்வியா! இல்லை திருடினேன். அங்கே, இருந்தது திருடினேன். வேணும்; திருடினேன். கேட்டா, கொடுக்கமாட்டாரு;திருடினேன்."
கோர்ட்டிலே பலர்சிரித்தேவிட்டார்கள். முத்துச்சாமியே இதைக் கேலிக் குரலிலே சொன்னானே தவிர கோபக்குரலில் அல்ல. அப்பாசாமி தலையைத்தொங்கப்போட்டுக் கொண்டு ஒரு மூலையில் நின்று கொண்டு இருந்தார்.