14
பித்தளை அல்ல,
அன்று இரவுகூட, அவளிடம் பேசிக் கொண்டு இருக்கத்தான் முத்து சென்றான்; யாரோ தோட்டத்துப் பக்கம் வருவதுதெரிந்ததும், வேறுபக்கம் ஓடாமல் வீட்டின் மொட்டை மாடிமீது தாவினான்—அங்கு ஒளிந்து கொள்ள இடம் வசதியாக இல்லாததால், அங்கு இருந்த அறைக்குள் நுழைந்தான்.அது எம்பெருமாளுடைய படுக்கை அறை. பதறிப் போனான் முத்து. காலடிச் சத்தம் கேட்டதும், மேலும் பயந்து, அங்கு போடப்பட்டிருந்த கட்டிலடியில் படுத்துக்கொண்டு கட்டை போலாகி விட்டான். உள்ளே ஒருவர் நுழையக் கண்டு, 'தீர்ந்தது; பிடிபட்டுவிடுவோம்' என்று எண்ணிக் கொண்டான். பயத்தால், வியர்த்துவிட்டது. உள்ளே நுழைந்த உருவமோ, கதவை மெதுவாகச் சாத்திக் கொண்டு, பதுங்கிப் பதுங்கி, நடந்து அங்கு இருந்த இரும்புப் பெட்டியைத்திறக்கக் கண்டான். முத்துவுக்கும் சிரிக்கலாம் போலத்தோன்றிற்று. அந்த உருவம் இரும்புப் பெட்டியில் இருந்த நகைப் பெட்டியை எடுத்து, அதில் இருந்த நாலு தங்க வளை யல்களை எடுத்து, மடியில் பத்திரப்படுத்திக் கொள்ளக்கண்டான். உற்றுப்பார்த்தான் முகத்தை, பதறிப்போனான்.இரும்புப் பெட்டியைப் பழையபடி பூட்டிவிட்டு, அந்த ஆள் வெளியே சென்றுவிட்டான். சில விநாடிகள் முத்து, எழுந்திருக்கக்கூட இல்லை; திகைத்துப் போயிருந்தான். பிறகு,மெள்ள எழுந்திருந்து, இரும்புப் பெட்டியிலிருந்து வளையல்களைக் களவாடியவன், அவசரத்தில் அங்கு போட்டுவிட்ட மேல் துண்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். ஒருவரும் தன்னைப் பார்க்கவில்லை என்பது முத்துவுக்குத்தெரிந்தது. என்றாலும், உடனே அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடாமல், ஏதோ யோசித்தபடி இருந்தான்.சில விநாடிகளில், ஏதோ ஓர் முடிவுக்கு வந்து, அங்கு கிடந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கீழே போட்டான். சத்தம் பலமாகக் கிளம்பவே, 'யார்? யார் அங்கே' என்ற குரல் கிளம்பிற்று. எம்பெருமாளின் குரல் என்பது முத்துவுக்கு விளங்கிவிட்டது. அவன் முகத்திலே ஒரு தனியான ஒளி பிறந்தது.மாடிமீது இங்கும் அங்கும் ஓடலானான். 'திருடன் திருடன்!' என்று எம்பெருமாள் கூவினார்—வேலையாட்கள் 'எங்கே?-