பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னேதான்!

15

எங்கே?'என்று கேட்டபடி, மாடிப் பக்கம் ஓடி வந்தனர்.முத்து, தோட்டத்துப் பக்கம் குதித்தான்-'அதோ! அதோ!'என்று கூவினர் வேலையாட்கள்; முத்து ஓடலானான்—வேலையாட்கள் துரத்தினர்—அவர்கள் தன்னைத் தொடர்ந்து வருவதைப் பார்த்தபடி, முத்து வேகமாக ஓடியபடி இருந்தான். இதற்குள், தெருவில் ஒரே பரபரப்பு ஆகிவிட்டது. இதற்குள் போலீசும் வந்துவிட்டது; முத்துவை போலீஸ் துரத்திற்று. முத்து குறுக்குச் சந்துகளிலே நுழைந்து ஏரிக்கரைப் பக்கம் சென்றுவிட்டால் தப்பித்துக் கொள்ளாலாம். ஆனால் அவன் நேரே நெடுஞ்சாலை வழியே ஓடிக் கொண்டே இருந்தான்;போலீஸின் பார்வை அவன்மீது பட்டபடி இருந்தது.முத்து நேரே தன் வீட்டுக்குள் நுழைந்தான். கதவைத் தாளிட்டுக் கொண்டான். அப்பாசாமி அவனைக் கண்டதும் அலறிக் கொண்டு எழுந்தார். அவருடைய கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு, கூடத்து அறைக்குள்ளே போனான். ஒரு மேல் துண்டை அவர் முன் வீசி எறிந்துவிட்டு "உடனே! உடனே போலீஸ் வந்து கொண்டே இருக்கிறது எடு! எடு!" என்றான்.அப்பாசாமி திகைத்திடக் கண்டு "அப்பா! போலீஸ் வந்துவிட்டது; அதோ கேள் சத்தம், தெருக்கதவைத் தட்டுகிறார்கள்' என்று கூறினான். அப்பாசாமியின் கண்களில் நீர்தளும்பிற்று. ஒரு பழைய துணி மூட்டையைக் காட்டிவிட்டு தலை யின் மீது கைவைத்துக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டார். மூட்டையிலிருந்து வளையல்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்ட முத்துசாமி, தெருக்கதவைத் திறந்தான்; போலீஸ்காரர்கள், அவன் மீது பாய்ந்தனர். பதறவுமில்லை, பயப்படவுமில்லை முத்து. நிதானமாக, அவர்களைப் பார்த்து, "ஏன்! என்னைத்தானே தேடிக்கிட்டு வந்தீங்க? சரி வாங்க" என்று கூறினான். போலீஸ் கொட்டடி சென்றதும், வளையல்களை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு,களவாடியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் கொடுத்தான்."

"ஏன்யா! அப்பாசாமி! நான் சொன்னனே கேட்டயா.அந்தப் பயலை, வீட்டிலே சேர்க்காதே! உனக்கு அவமானத்-