16
பித்தளை அல்ல,
தைத் தேடிவைத்து விடுவான்னு சொன்னனே,கேட்டயா!இங்கேயே காட்டிவிட்டானே, அவனுடைய கைவரிசையை!பார்த்தாயா...எவ்வளவு கேவலம் உனக்கு? எவ்வளவு தலை இறக்கம்.. இப்படிப்பட்டதுகளை வெட்டிப்போடணுமய்யா,இந்த மாதிரியா ஒரு பிள்ளை இருக்கறதைவிட சாகட்டுமே..." என்று எம்பெருமாள் ஆத்திரத்துடன் பேசினார்.அப்பாசாமி அவர் காலில் விழுந்து.
"ஐயோ! வேண்டாமுங்க. உங்க வாயினாலே பையனை ஒண்ணும் சொல்லிவிடாதிங்க" என்று கெஞ்சினார். எம்பெருமாள், "பிள்ளைப்பாசம் இருக்க வேண்டியதுதான். ஆனா இதுபோல இருக்கிற திருட்டுப் பயல்களை,பிள்ளைன்னு சொல்லிக் கொள்வதுகூட உன்னைப்போல நாணயஸ்தனாக வாழ்ந்து வருகிறவனுக்குக் கேவலமய்யா" என்று கூறினார். அப்பாசாமி தலை தலை என்று அடித்துக்கொண்டு அழுதார்.
எவ்வளவு பேசினாலும் வள்ளியை ஒருநாளும் கைநீட்டி, அப்பாசாமி அடித்ததில்லை; கோர்ட்டிலிருந்து வீட்டிற்கு வந்த அன்று குடும்பத்துக்குத் தீங்கு தேடி விட்டானே முத்து என்று வள்ளி ஏசிப் பேசியபோது ஆத்திரம் கொண்டு அப்பாசாமி அவளை அடித்துவிட்டார்.
"ஒரு வார்த்தை பேசாதே அவனைக் குறித்து...அவனை ஏச உனக்கு என்னடி யோக்யதை இருக்குது...அவன் திருடி ஜெயிலுக்குப் போனான்னு, கேவலமாப் பேசாதே... முத்துவைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேவலமாப்பேச, நான் இடம் கொடுக்கமாட்டேன்." என்று அப்பாசாமி ஆவேசம் வந்தவர்போலப் பேசக்கேட்ட வள்ளி, மகன் திருடிவிட்டு ஜெயிலுக்குப் போனதாலே மனது குழம்பிப் போய்விட்டது என்று எண்ணிக் கொண்டாள்.
ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல், அப்பாசாமி, கண்ணீர் சிந்தியபடி மூலையில் உட்கார்ந்து கொண்டார். வள்ளிக்கோ அவரிடம் சொல்லியே தீர வேண்டிய முக்கியமான விஷயம் இருந்தது. சமாதானமாகப் பேசிப் பார்ப்போம் என்று....