பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

எழுத்தாளர்கள் மட்டும் உடையை மாற்றிக்கொள்வது போல் மனத்தை மாற்றிக்கொண்டு, எழுது -வதையெல்லாம்'கதை' என்று கதைக்கின்ற இந்தக் காலகட்டத்தில், உங்கள் கரங்களில், உண்மையானஉயிருள்ள கதைகளைச் சிருஷ்டித்த பெருமைக் குரிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறுகதைத் தொகுப்பை, 'பித்தளை அல்ல,பொன்னேதான்!' என்னும் தலைப்பில் தவழவிட்டிருக்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் 'சிறுகதை' என்பது சுவீகாரக் குழந்தைதான்.அதுவும் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட குழந்தை அது.

அந்தக் குழந்தையை அமரர் அண்ணா அவர்கள், தம் கரத்தில் ஏந்தித் தவழவிட்டிருக்கும் பாங்கை இதில் நீங்கள் பரவலாகக் காணலாம். அந்தக் குழந்தையின் மூலமாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் விழிப்பை மட்டுமா, நல்ல வெளிச்சத்தையும் தரக் கூடிய ஒன்றாகும்.

அத்தகு சிறப்புள்ள—உயிர்த் துடிப்புள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி ராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதய பூர்வமான நன்றி.

—பூம்புகார் பிரசுரத்தார்.