பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O பின்னு செஞ்சடை

இப்படியே பிரபஞ்சம் ஒடுங்கும்பொழுது ஒரு தத்துவத்துள் மற்றென்று ஒடுங்கி வருகிறது. விரிந்த மலர் பொழுதானதும் கூம்புவது போல, சர்வ சங்கார காலத்தில் பிரபஞ்சம் முழுவதும் குவி கின்றது. அப்படிக் குவியும்படி இறைவன் செய் கிருன். - பிரபஞ்சம் விரிவதற்கும் குவிவதற்கும் காரண கை இருப்பவன் இறைவன். அவன் பிரபஞ்சத் தோடு ஒன்ருகி அபேதம்ாயும் இருப்பவனுகையால் பிரபஞ்சத்தின் விரிவை அவனுடைய விரிவாகவே சொல்லிவிடலாம். அவனுடைய திருமேனி என்று தனியே ஒன்று இல்லை. பிரபஞ்சமே அவன் திரு மேனி. புவனத்தில் உள்ள அழகெல்லாம் அவ துடைய பேரழகுதான். புவன சுங்தாகிைய அவனு டைய பெருமையையும் விரிவையும் ஆற்றலையும் பிற பஞ்சத்தைக் கொண்டே உணர்ந்து கொள்ளலாம். தத்துவத்தின் மூல விதையாக இருக்கும் இறை வன் தானே தத்துவங்களாகவும், பிரபஞ்சமாகவும் விரிந்து விளங்குகிருரன். ஒடுங்கும் காலத்தில் அவற். றையெல்லாம் ஒடுக்கிக் கொண்டு குவிந்து நுண் பொருளாக கிற்கிருன். உலகம் தோற்றிய பொழுது அவன் விரிந்து விளங்குகிருரன். குழந்தைகளுக்கு ரோட்டி ஆடை யணிந்து உணவூட்டி விளையாடவிடும் தாய் அந்தச் செயல்களுக்கு ஏற்ற பண்டங்களைக் கொண்டு சுறுசுறுப்பாக வேலை செய்கிருள். இறை வனும் பிரபஞ்சக் கடையை விரித்து வைக்கும் பொழுது யாருக்கும் இல்லாத சுறுசுறுப்போடு இருக்' கிருன், அவன் அருள் என்றும் இல்லாத விரிவை அடைகிறது. பிரபஞ்சத்தை ஒடுக்கும் பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/26&oldid=596927" இலிருந்து மீள்விக்கப்பட்டது