பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு கோயில்கள்

பெரிய செல்வர்களானல் பரிவாரங்களுடன் பல இடங்களுக்குப் போவார்கள், வருவார்கள். அவர்களே அழைத்து உபசரிக்க எல்லோராலும் முடியாது. அவர்களோடு நெருங்கிப் பழகுவதே அருமை. ஆதலால் யாரோ சிலரே அவர்களே அழைத்து உபசரிப்பார்கள். செல்வர்கள் கிலேயே இதுவானுல் மன்னர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. விரிவான இடமும் செயலும் இருப்பவர்கள் அவர்களை வரவேற்று உபசரிக் கலாம். , f -

எல்லாவற்றையும் தன் அருளாணேயால் ஆட்சி புரியும் இறைவன் மன்னர்களுக்கெல்லாம் மேலான மன்னன். "மன்னே மாமணியே' என்று சுந்தர மூர்த்தி நாயனர் சொல்வார். அந்த மன்னனே அழைத்து உபசரிக்க வேண்டுமானல் எல்லாராலும் முடியாது என்றுதான் முதலில் தோன்றுகிறது. "அவர் நம்முடைய வீட்டுக்கு வருவாரா?' என்று. செல்வர்களே கினைந்து பேசுவதுண்டு. செல்வர் களுக்குட் செல்வகிைய இறைவனைப் பற்றியும் அப் படித்தான் சொல்ல வேண்டுமா? -

இறைவன் வெறும் செல்வர்களைப் போல எல்லாவற்றுக்கும் உடையவகை மட்டும் இருந்தால் ஒருகால் இடம்பார்த்துப் போவான். ஆனல் அவன் யாரிடமும் இல்லாத பெருங்கருணே படைத்தவன். அன்பினல் யார் அழைத்தாலும் அவர்பால் செல்ப,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/64&oldid=597011" இலிருந்து மீள்விக்கப்பட்டது