பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பின்னு செஞ்சடை

தார்கள். நோய் குறைந்தது போலத் தோன்றியது. ஆனல் காலம் வளர வளர அவருடைய வாழ்நாள் சுருங்கிக் கொண்டே வந்தது. கடைசியில் கங்கை யார் உலகை விட்டுப் போய் விட்டார்.

கங்தையார் செளக்கியமாக இருக்கிருர் என்று கினைத்திருந்த காலம் ஒன்று. அவர் அசெளக்கிய மாகப் படுத்திருந்தாலும், இ ரு க் கி ரு i என்று சொன்ன காலம் ஒன்று. இப்போதோ அந்தச் செல்வர், "தந்தையார் போயினுக்' என்று அங்கலாய்க் கிருரர். போனவர் அப்படியே வரப் போகிருரா? அவர் போனவர் போனவர்தாம்,

அடுத்த முறை காயினுடையது. அவள் தங்தை யாருக்குப் பின் வாழ்ந்தாள். ஆனல் வாழும் வகை யில் வாழமுடியுமா? அவளும் களர்ச்சியடைந்தாள். நோயுற்ருள் ; மாண்டாள். இப்போது அ ங் த ச் செல்வர், "தந்தையார் போயினர் தாயரும் போயி னர்' என்று சொல்லி அழுகிருரர். -

இந்த அழுகை அவரோடு கிற்கிறதா? அவர் கங்தையார் தாம் படைத்த பெருஞ் செல்வத்தை அவருக்கு விட்டுச் சென்ருரர். அந்தச் செல்வத்தை இந்தச் செல்வர் தம்முடைய மக்களுக்கு விட்டுச் செல்லப் போகிருரர். அதுமட்டுமா ? "தந்தையார் போயினர்; தாயரும் போயினர்' என்று சொல்லும் சொல்லையும் அந்த மக்களும் சொல்லக்கான் போகி ரர்கள். ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரை யாகச் செல்வம் வருவது நிச்சயம் அன்று. ஆல்ை, "தந்தையார் போயினர்; தாயரும் போயினர்' என்ற அழுகை மாத்திரம் எல்லாக் குடும்பத்தக்கும் பரம் பரைச் சொத்தாக வந்து கொண்டே இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/72&oldid=597027" இலிருந்து மீள்விக்கப்பட்டது