பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8孕 பின்னு செஞ்சடை

முன்பு நீ செய்த நல்வினைப் பயன்களுள்ளே என்ன புண் ணியஞ் செய்தனே !! என்று ஞான சம் பக்தப் பெருமான் தம் நெஞ்சைப் பார்த்துக் சொல்கிரு.ர்.

என்ன புண்ணியஞ் செய்தனே நெஞ்சமே

இருங்கடல் வையத்து முன்னே நிசெய்த நல்வினைப் பயனிட்ை ?

女 ந்த எண்ணம் திருவலஞ் சுழியென்னும்

திருத்தலத்துப் பெருமானத் தரிசித்து இன்புற்ற போது தோற்றியது. சோழ நாட்டில் காவிரிக்குத் தென் கரையில் இருப்பது திருவலஞ்சுழி. அங்கே திருஞான சம்பந்தர் வந்து சில நாட்கள் தங்கி யிருந்தார். அடியார்களோடு அந்த அழகிய தலத்தில் நாள்தோறும் வழிபட்டதல்ை உண்டான இன்பம் இன்னதென்று சொல்ல முடியாத அளவில் கிரம்பி யிருந்தது.

கூடும் அன்பினிற் கும்பிட லேஅன்றி - வீடும் வேண்டா விறலின் விளங்கி'ய

சம்பந்தப் பெருமானுக்கு அந்த இன்பம் பேரின் பத்தோடு ஒத்ததாக இருந்தது. அத்தகைய இன்பத்தைப் பெறுவதற்குப் பலகாலம் புண்ணியச் செயல் பல புரிந்திருக்க வேண்டும் என்று தோற். றியது. அதல்ை நெஞ்சை விளித்து இவ்வாறு சொல்லத் தொடங்கினர். -

திருவலஞ்சுழி காவிரிக் கரையில் அமைந்த தலம். பொன்னும் மணியும் முத்தும் கொழிக்கும் காவிரியாறு அங்கே அழகாகக் கோயிலை வலஞ் செய்வதுபோல வளைந்து வருகிறது. மலைமேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/90&oldid=597063" இலிருந்து மீள்விக்கப்பட்டது