பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பின்னு செஞ்சடை

ஆதரித்து . விரும்பி. ஏத்துதல் புகழ் கூறுதல். அதஞ்ல் என்றது பன்னு:தல் முதலியவற்றைத் தொகுத்துச் சுட்டியது. அந்த இன்ப விளைவு உண்டானதால் அதற்குக் காரணமாக இருந்த புண்ணி யம் யாது என்று வினவினர்.

கல்வினைப் பயனிடை வழிபடும் அதேைல, என்ன புண்ணி யஞ் செய்தனே என்று கூட்டியும் பொருள் கொள்ளலாம். முன்பு செய்த நல்ல வினேகளின் பயன்களை இப்போது அதுபவித்து வருகிருேம். அவற்றுள் வலஞ்சுழி வாணனே வழி படும் அநுபவம் மிகச் சிறந்தது. அதற்குக் காரணமான புண்ணியச் செயல் யாது ?-இவ்வாறு அந்த முடிபுக்கு ஏற்பப் பொருள் விரித்துக் கொள்ளலாம்.)

'தவமும் தவமுடையோர்க் காகும் அவமதனே

அஃதிலார் மேற்கொள்வது' - என்னும் திருக்குறளின்படி இறைவனுடைய திரு. வடிகளை வணங்கும் கிலே வருவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். - - - காவிரி இத்தலத்துக்கு அருகே வருகையில் ஒரு பிலத்திற்குள் சென்று விட்டது. ஏரண்ட முனிவர் என்னும் பெரியார் அந்தப் பிலத்தில் இறங்கித் தம்மையே பலியாக்கிக் கொள்ள, காவிரி, மேலே வந்து வலமாகச் சுழித்துக் கொண்டு போன தால் இத்தலத்துக்குத் திருவலஞ் சுழி என்ற பெயர்.

அமைந்த கென்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/94&oldid=597071" இலிருந்து மீள்விக்கப்பட்டது