பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பேறுகாலம் ஒழுங்கான ஆரோக்கியம் மிகுந்த உடல் வலுவும் பக்குவப்பட்ட திடமான மன வல்லமையும் கொண்ட யுவனும் யுவதியும் தம்பதியாகி, முதல் இரவு கண்ட அன்றேகூட பெண் கருத்தரிக்கும் பேற்றினை அடைய வாய்ப்பு இருக்கிறது. கல்யாணமாகி பத்தாவது மாதத் தில் குழந்தை பெற்றுவிட்டாள்!’ என்று ஆச்சரியம் தொனிக்கப் பேசிக் கொள்வதை யாவரும் கேட்டிருக் கிறோம். ஆனால் அத்தகைய பிள்ளைப் பேற்றுக்கு இலக்காகும் அந்தத் தாய்-அவள் புருஷன் இருவருடைய மணவாழ்க்கை அவ்வளவு மனக்கோலாகலத்துடன் விளங்குவதற்கு வழியில்லை; வாய்ப்புமில்லை. திருமணம் நடந்து குறைந்த பட்சம் ஓராண்டாவது தம்பதி இருவரும் ஆனந்தக் கேளிக்கையில் பல்வகை இன்ப லீலைகளையும் ஆண்டனுபவித்த பின்னர், மனைவி யானவள் கருவுற்றால், அம்முடிவின் ஆரம்பமாக அக் கணவன் எய்தும் மகிழ்வின் மனநிலை தனிப்பட்டதாகவே இருக்கும். இதுவே உண்மையான, பிரத்யட்ச நடப்பும் கூட. திருமணமான சடுதியிலேயே இரண்டு நபர்களுடன் கூட இன்னொரு நபரும் அதாவது குழந்தையும் இடம் பெறும் நிலை உருவானால், அப்புறம் குடும்பம் என்ற ஒரு வரன்முறை, சுவையற்றதாகவும் ஒரு பயங்கரமாகவும் நிலவுவதைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. அவ்வாறு ஒரு சமயம் சீக்கிரமே பெண் தாய்மைப் பேற்றினை பி-2 - -