பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 47 அவர்களின் கனவுகள் ரம்யமான முறையில் வளர அம். மாதிரிச் செயல்கள் உதவும். . சில்ல்றைச் சண்டை, கோபதாபம் கூடாது. சாவு. வீடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள தொடர்பு மனோ தத்துவ அடிப்படையில் அமைந்திருப்பதால் கர்ப்பிணிகள் இம்மாதிரி விஷயங்களை அசட்டை செய்து விடலாது: 12. உடலுறவு கருவுற்ற காலத்தில் தாம்பத்தியப் புணர்ச்சி கூடாது என்று சில உடற்கூறுவல்லுனர்கள் கூறுகிறார்கள். இக் காலத்தில் அளவோடு உடலுறவு கொள்ளலாம் என்று அபிப்பிராயம் கொண்டிருப்போரும் உண்டு. ஏனெனில் கருவுற்ற பெண்களின் ஆசைகளை நிராகரிக்கலாகாது என்பது உட்கருத்தாகும். மனைவியின் விருப்பப்படி, அளவோடு புணர்ச்சி கொள்ளுவதில் கண்ணும் கருத்து மாகக் கணவன் அக்கறை கொண்டிலங்க வேண்டும். கணவனின் மோக வெறிக்கு கர்ப்பிணி பலியாகக்கூடாது. அவ்வாறு உண்டாகும்போது கருச்சிதைவு ஏற்படக் கூடும். சாதாரணமாக, கரு உருவாகிவிட்ட தன்மை ஸ்திரமானபின்தான் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டும். . எட்டாவது மாதத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ளு. வது கூடவே கூடாது. உடலுறவு கொண்டால், பிரசவத் தில் பல தொல்லைகளைக் கர்ப்பவதி அனுபவிக்க நேரிடும்; அதன் விளைவாக, பிறக்கவிருக்கும் சிசுவுக்கும் ஆபத்து விளையலாம். மனைவி கருவுற்ற காலத்தில், அவள் கணவன் தகாத நடவடிக்கை மூலம் வேறு பெண் களுடன் தொடர்பு கொண்டு, அதன் பலனாக ரகசிய நோய்கள் உண்டாகி, அப்புறம் அவன் தன் சொந்த,