பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 73 சேலைகளை மிகவும் தளர்த்தியாக உடுத்துக் கொள்ள வேண்டும். உள்பாடிகள் (Brassiers) கூடாது. கட்டுப் படுத்த முயன்றாலும், அம்முறையை மீறியவகையில் பிரசவ வேதனை கர்ப்பவதியை ஆட்டிப்படைக்கும். ஆனாலும், கர்ப்பவதி தன்னம்பிக்கையுடனும் மனபலத் துடனும் இருக்கவேண்டும். தாய் எனும் பதவியை அடை வதற்கு அவள்படும் வேதனைகளை-செய்யும் தியாகங் களைத்தான்-குடும்ப இயல் வரலாறு எப்போதோ எழுதி வைத்து விட்டதே! புதியதொரு சூழலை அனுபவிப்பதற்கென்று கர்ப் பிணி வளைகாப்பு வைபவம் அனுபவித்துத் தாய்வீடு செல்கிறாள். பிரசவத்துக்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள். பிரசவத்திலருந்து தன்னையும்குழந்தை யையும் நல்லபடியாக விடுதலை செய்து காக்கும்படி நாள். தோறும் பிரார்த்தனை செய்து கொள்கிறாள். அடிவயிற்றின் சுமை காரணமாக கால்வீக்கம் ஏற் படும். தலைப்பிரசவக்காரிகளுக்கு இந்நோய் தவிர்க்க முடியாததாகவும் இருக்கும். பிரசவம் ஆன சடுதியிலேயே இந்த வீக்கம் மறைந்துவிடும். உணவு, உழைப்பு, ஓய்வு போன்ற வழக்கமான கட்டுப்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மலச்சிக்கல் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட வேண் டும். மலச்சிக்கல் ஏற்பட்டால் எனிமா (enema) கொடுக் கப்படவேண்டும்! பழவகைகள்,பால், தேன் பார்லித் தண்ணீர் போன் றவை மிகமிகப் பயன்தரும். - - ஒன்பதாம் மாதக் கடைசியில் குழந்தை 20 அங்குல நீளமும் ஆறு முதல் எட்டு.ராத்தல் எடையும் இருக்கும்.