பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 83 யோகப்படுத்த வேண்டும். காற்றோட்டம், உஷ்ணம் ஆகியவை உடலுக்கு இன்றியமையாதவை. சோம்பல் படாமல், வீட்டு அலுவல்களைப் பார்ப்பதும், காற்றாட உலாவுவதும் முக்கியம். வெந்நீர் ஒற்றடம் கொடுக் கலாம். வீக்கம் குறையச் செய்ய இவை உபசாந்தி களாகும். வீங்கிய கை,கால்களைத் தொங்கப்போட்டபடி இருக்கலாகாது.தானுந்தர் தைலம் தடவலாம். சாதாரண வீக்கமானால், மெல்லத் தடவிவிட்டால் சரியாகிவிடும். உணவு மூலமே சரி செய்து கொள்ளவும் முடியும். கன்னத் தாடைகளில் வீக்கம் கண்டால் டாக்டர்களை நாடவேண்டும். மலம் கழிவதற்கு பழவகைகளும் வெந்நீரும் உதவும். அடிக்கடி தண்ணிர்-பச்சைத் தண்ணிர் குடிக்கலாம். பார்லி அரிசியை வேக வைத்த தண்ணிர், சிறுநீரைக் கழிக்க உதவும். இதை அடிக்கடி குடிப்பது நல்லது. நீர்க் கடுப்பு: இப்போது நீர்க்கடுப்பும் ஏற்படும். இதற்கும் பார்லித் தண்ணிர்தான் பரிகாரம். பெரிய கம்பெனிகளின் விலை உயர்ந்த சோடா குடிக்கலாம். பிறப்புறுப்பை இளஞ் சூடுள்ள நீரால் கழுவி விடலாம். தொப்புளிலும் நகக் கண்களிலும் சுண்ணாம்பு தடவுபவர்களும் இல்லாமல் இல்லை. எக்காரணத்தைக் கொண்டும் மூத்திரப் பையைச் சுமையுடன் வைக்கக்கூடாது. இப்பையின் அழுத்தத்தால் கருப்பப் பையில் உள்ள சிசு பாதிக்கப்படும். சிறுநீர் அடைப்பு: எக்காரணத்தைக் கொண்டும் சிறுநீர் அடைப்பு ஏற். படாத வகையில் கர்ப்பிணிகள் ஜாக்கிரதையுடன் இருந்