பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பிரசவம் ஓர் அற்புதம்! பிரசவம் என்பது ஒர் இயல்பான-சராசரியான நிகழ்ச்சி என்பதாகவே டாக்டர் ஏ. காப்லான் (Dr. A. Kapilan) போன்றோர் சொல்லியிருக்கிறார்கள். பிரசவம் என்பது இயற்கைப் பூர்வமானதொரு கடமை ஆற்றலாகும். இது ஒரு நோயன்று. ஆனாலும் நோய்க்குரிய ஆடம்பரங்களும் அனுசரணைகளும் அபாய அறிவிப்புகளும், அபாயங்களும் இந்தப் பிரசவ நிகழ்வுக் குள் பொதிந்து கொண்டுள்ளன. இந்நிகழ்வை மறு பிறப்பு’ என்றும், பிறப்புக்கு ஒரு பொருள் உரைக்கும் கர்மம்' என்று சொல்லப்படும். - கணவன் கொடுத்த மங்கள செள பாக்கியங்களுக்காக, மனைவி என்னும் தியாகப் பிண்டம் அவன் ஈந்த அன்பை வயிற்றிடைச் சுமந்து ஒரு குழந்தை உருவத்தில் காட்டி, தானும் மகிழ்ந்து, தன் கணவரையும் மகிழ்வித்து, தன் குடும்பத்துக்கு ஒரு பரம்பரையை - பாரம்பர்யத்தை (heredity) உண்டாக்கிக் கொடுத்து விடுகிறாள். தாய்' என்பவள் தியாகத் தெய்வம். - - கணவனுக்குத் தொண்டு செய்வதன் மூலமே அவளுக்கு வானுலகில் உயர்பதவி கிட்டும்' என்ற மனு தர்மத்துக்கு உதாரணமாகி நிலவுகிறாள் அவள். - ஆம்; தன் கணவனுக்கு அவள் செய்யும் அமரத் தொண்டாகவே குழந்தை அமைகிறது. . தாய், தந்தை, குழந்தை எனும் முக்கோண அமைப் பில் அமையும் உயிர் வாழ்க்கைக்கு, குழந்தைதான் ஓர் இணைப்புச் சங்கிலி. . . "