பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பிரதாப முதலியார் சரித்திரம்

ருடைய நித்திய காலத்தை யார் அளவிடக்கூடும்? நாம் புண்ணியம் செய்வோமேயானால் முடிவில்லாத நித்திய சுகத்தை அனுபவிக்கலாம். பாவம் செய்வோமானால் முடிவில்லாத துன்பத்தை அநுபவிக்க வேண்டும்” என்றார்.

இவ்வகையாக நானும் ஞானாம்பாளும் அவளுடைய வீட்டிலே படித்துக் கொண்டுவரும்போது, எங்களுக்கு வயது அதிகரித்ததால் இனிமேல் நாங்கள் இருவரும் ஓரிடத்திலே படிக்கக் கூடாதென்று என் தாயார் அபிப்பிராயப்பட்டு, என்னை வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டார்கள். அதுமுதல் ஞானாம்பாளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் நேரிடாதபடியால், எனக்கு மகத்தான விசனகரமாயிருந்தது. எங்கள் உபாத்தியாயர் முந்தி ஞானாம்பால் வீட்டுக்குப் போய் அவளுக்குப் பாடம் கொடுத்தபிறகு, என் வீட்டுக்கு வந்து எனக்குப் பாடம் சொல்லிக்கொண்டு வந்தார். அவர் ஞானாம்பாளைப் பார்த்து வருகிறவரானபடியால் அவருடைய முகத்தைப் பார்க்கும்போதெல்லாம், ஒருவாறு எனக்குத் திருப்தியாயிருந்தது. அவர் ஒருநாள் என்னைப் பார்த்து ஞானாம்பாள் நல்லவள் என்று நினைத்தேன். அவள் உன் தாயாருக்கு ஒரு துரோகம் செய்துவிட்டாள் என்றார். இதைக் கேட்டவுடனே நான் மலைத்துப் போய்ப் பேசாமல் இருந்தேன். அவர் உடனே சிரித்துக் கொண்டு சொல்லுகிறார். “ஞானாம்பாள் பிறக்கிறதற்குமுன், குணத்தில் உன் தாயாருக்குச் சமமான ஸ்திரீகள் ஒருவரும் இல்லை. ஞானாம்பாள் பிறந்த பிற்பாடு அவள் உன் தாயாருக்குச் சமானம் என்று சொல்லும்படியாகப் பிரகாசிக்கிறாள். இது தான் ஞானாம்பாள் செய்த துரோகம் என்றார். இதைக் கேட்டவுடனே என் கவலை தீர்ந்து அகமகிழ்ச்சி அடைந்தேன்.

இவ்வண்ணமாகச் சில நாள் என் வீட்டில் தனிமையாய்ப் படித்த பிற்பாடு, ஒருநாள் உபாத்தியாயர் என்னை நோக்கி வசனிக்கிறார்: “”ஆசான் மாணாக்கனுக்கு