பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதியாய பஞ்சகம்‌

299

கொளுத்திவிடும்படி மந்திரி ஆக்ஞாபித்து அந்தப் பிரகாரம் நெருப்பு வைக்கப்பட்டது. அந்த நெருப்பு நகரமெங்கும் பரவி எல்லா வீடுகளையும் பொருள்களையும் நாசஞ் செய்துவிட்டது. தீயை அவிப்பதற்காக ஏரியின் கரையை உடைக்கும்படி மந்திரி உத்தரவு செய்து அந்தப் பிரகாரம் ஏரியின் கரை உடைக்கப்பட்டது. ஏரியின் ஜலமெல்லாம் வீணாய்ப் போய்விட்டதால் வயலுக்குப் பாய்ச்சத் தண்ணீரில்லாமல் பயிர்களெல்லாம் வாடி வதங்கின. பயிர்கள் வெய்யிலினால் வாடாதபடி ஊரிலுள்ள மரங்களையெல்லாம் வெட்டிப் பயிருக்குப் பந்தலிடும்படி செய்வித்தான். இந்தப் பிரகாரம் மந்திரி ஊரையெல்லாம் பாழாக்கி விட்டான்.

II. பயறு அளக்கிற விஷயத்தில் விற்கிறவனுக்கும் கொள்கிறவனுக்கும் கலகம் உண்டாகி, மத்தியஸ்தர்களிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். விற்கிறவன் “மரக்காலைக் கவிழ்த்துப் பின்புறத்தால் அளப்பேன்” என்றான். வாங்குகிறவன் “வழக்கப்படி மரக்காலின் முன்புறத்தால் அளக்க வேண்டும்” என்றான். மத்தியஸ்தர்கள் இருவருக்கும் பொதுவாக மரக்காலைப் படுக்க வைத்து குறுக்காக அளக்கும்படி தீர்மானித்தார்கள்.


III. ஒரு சேணியனுடைய பிள்ளை குளத்தில் விழுந்து இறந்து போய்விட்டது. அந்தக் குளத்துக்குடையவன் மேலே சேணியன் குற்றஞ் சாட்டினான். உடையவனை அரசன் வரவழைத்து விசாரித்தபோது அவன் குளம் வெட்டின கூலிக்காரன் மேலே குற்றஞ் சுமத்தினான். அவர்கள் குளம் நிறையும்படி மழை பெய்த மேகத்தின் மீது குறை கூறினார்கள். குயவனுடைய சூளையினின்று கிளம்புகிற புகையினால் மேகம் உண்டாவதாக அரசன் எண்ணிக் குயவர்களை யெல்லாம் குலநாசஞ்செய்தான்” என்றார்கள்.

என்னுடைய அபிப்பிராயமும் ஞானாம்பாளுடைய அபிப்பிராயமும் அநேக விஷயங்களில் ஏக பாவமாக