பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய் மொழியை வளர்த்தல்‌

315

வாதமும் மற்ற நடவடிக்கைகளும் நடந்தால் மட்டும் உண்மை வெளியாகுமே தவிர, அவர்களுக்குத் தெரியாத பாஷையில் நடந்தால் எப்படி உண்மை வெளியாகும்? இங்கிலீஷ் தெரிந்த சுதேச நியாயாதிபதிகள் சித்தாந்தம் மட்டும் இங்கிலீஷில் எழுதலாமென்று சிவில் ப்ரொசீஜர் கோட் (Civil procedure code) சொல்லுகிறதே யல்லாமல் மற்ற நடபடிகளையும் இங்கிலீஷில் நடத்தும்படி சொல்லவில்லை. வெளிப்பிரதேசக் கோர்ட்டுகளில் சுதேச பாஷைகளையே உபயோகிக்கவேண்டுமென்றும், அந்நிய பாஷைகளை உபயோகிக்கக் கூடாதென்றும், இங்கிலீஷ் துரைத்தனத்தாரே உத்தரவு செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கச் சில தமிழ் நியாயாதிபதிகளும் சில வக்கீல்களும் இங்கிலீஷ் பாஷையை மறந்து போகாமலிருக்க வேண்டியதற்காக இங்கிலீஷைக் கலந்து நியாயபரிபாலனத்தைக் குறளுபடி செய்வது கிரமமா?

கோர்ர்ட்டில் நடக்கிற விசாரணைகளும், தீர்மானங்களும் அபராதங்களும், ஆக்கினைகளுஞ் சகல ஜனங்களுக்கும், பிரசித்தமாய்த் தெரிந்திருந்தால் அவர்கள் தங்கள் தங்களுடைய காரியங்களில் ஜாக்கிரதையா யிருக்கவும் துன்மார்க்கங்களில் பிரவேசிக்காமலிருக்கவும் எல்லாருக்கும் அநுபோகம் உண்டாகுமல்லவா? கோர்ட்டில் நடக்கிற விவகாரங்களைக் கேட்டு விவேகமடைவதற்காகவே ஜனங்கள் கூட்டங் கூட்டமாய்க் கோர்ட்டுகளுக்குப் போய்க் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்திலே கரியைத் தடவுவது போல அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால் அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக்கூடும்? குருடன் கூத்துப் பார்க்கப் போனது போலவும், செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போலவும் யாதொரு பிரயோஜனமு மில்லாமல் அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். தமிழ்க் கோர்ட்டுகளில் இரண்டொரு வக்கீல்களெல்லாரும் இங்கிலீஷ் தெரியுமேயன்றி, மற்ற வக்கீல்களெல்லாரும் இங்கிலீஷ் தெரியாதவர்களா யிருக்கிறார்கள். ஒரு வக்கீல் இங்கிலீஷில்