பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாளுக்கு நோய்‌ கண்டது

359

எங்களுடைய பிராணங்களையும் ஆஸ்திகளையும் ஒன்றாகத் திரட்டி அந்த வைத்தியசாலையில் வைத்திருந்தால் எப்படியோ அப்படிப் போல நாங்கள் ஒரு பக்கத்திலும் தரியாமல் இரவும் பகலும் அந்த வைத்திய சாலையைச் சுற்றிக்கொண்டே திரிந்தோம்.

ஞானாம்பாள் பதினைந்து நாள் வியாதியாயிருந்தாள். அந்தப் பதினைந்து நாளும் பதினைந்து யுகம் போல இருந்தது. வைத்தியர்கள் எங்களைக் காணும் போதெல்லாம் “சௌக்கியம் ஆகும். சௌக்கியம் ஆகும்” என்று தாது புஷ்டியாகச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். பதினாறாம் நாள் வைத்தியர்கள் எங்களைக் கண்டவுடனே அழுதுகொண்டு “காரியம் மிஞ்சிப்போய் விட்டது.. வியசனப்பட வேண்டாம்” என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டவுடனே ஆயிரம் இடி எங்கள் தலைமேலே விழுந்ததுபோல அடித்து மோதிக் கீழே விழுந்து புரண்டு புரண்டு பொருமினோம்; புலம்பினோம்; பதறினோம்; கதறினோம். இன்னும் பல பெயர்கள் இறந்துபோய் விட்டதால் அந்த வைத்தியசாலைச் சுற்றிலும் அழுகைக் குரலேயல்லாமல் வேறு குரல் இல்லை. இத்தனை பெயர்களைக் கொண்டுபோன அந்த வியாதி எங்களையும் வந்து கொண்டு போகாதாவென்று எத்தனையோ தரம் பிரார்த்தித்தோம். அந்தத் துர்வியாதி எங்களை நாடவில்லை. ஞானாம்பாளுடைய உத்தரக் கிரியைகளைச் செய்யும்படி பிரேதத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். அம்மையினால் இறந்து போகிற பிரேதங்களை வெளியே கொண்டுபோகாமல் அந்தக் கொல்லையிலே அடக்கஞ் செய்யும்படி மேலான அதிகாரிகள் உத்தரவு செய்திருப்பதாகவும் ஆகையால் பிரேதத்தைக் கொடுக்க மாட்டோமென்றுஞ் சொன்னார்கள். பிரேதத்தைக் கைப்பற்றுகிறதற்கு நாங்கள் எவ்வளவோ பிரயாசைப்பட்டும் பயன்படவில்லை. அம்மை மும்முரமாயிருக்கிற அந்த ஊரில் ஒருவரும் இருக்கக் கூடாதென்றும், உடனே அவரவர்களுடைய ஊர்களுக்குப் போய்விட