பக்கம்:பிராயச்சித்தம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 லா. ச. ராமாமிருதம் ஸ்ேட் தன் நேரத்தில் பெரும்பகுதி புழங்கிய ரேழி அறை வாசலை இப்போது ஆபீஸ்' என்ற தோரனைப் பெயர், பலகையில் அலங்கரித்தது. "ஆயியே, ஆயியே, வாருங்கள். தங்களுக்கு நான் என்ன செய்யக்கூடும்?’’ ஆள் டீக்காயிருந்தான். தர்மராஜன் வாசலிலேயே தயங்கினார். 'நான் முன்னால் பார்த்தபோது இங்கே எம்பிராயிடரி வேலை நடந்துகொண்டிருந்தது.' 'ஓ, அப்படியா?’ புன்னகை புரிந்தான். மீசைக் கடியில் பற்கள் அழகாய்த் திறந்தன. "அப்புறம் பாலத்தடியில் வேண்டிய தண்ணிர் பாய்ந்து விட்டது. ’’ எனக்கு 'மனக்சந்த் சர்க்காரைத் தெரியும்.' 'அப்படியா? சாச்சாஜி இறந்து தான்கு வருடங்கள் ஆகப்போகின்றனவே! ஏன் வெளியவே நிற்கின்றீர்கள்? உள்ளே வாருங்கள். வந்து அமருங்கள். ' "அதுவும் தெரியும். மிஸ்டர் மனக்சந்தைக் கடைசி யாக உயிரோடு பார்த்தவன் நான்தான்.' ஒருகணம் திகைத்து அவர் சொன்னது உள்ளே ஊறியதும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. "க்யா? Wait a minute. அப்படியானால்...' அவரைச் சுட்டிய விரலுடன் அவன் கண்கள் வினாவின. ஆம் என அவர் தலை அசைத்தது. (ஆமாம் ஏன் இந்தக் கிண்டியாயநம; அவருக்கே தெரியவில்லை.) 'ஹரே பகவான், How strange: சப்ராளி மணியின் மாஜிக்கில் ஆள்தோன்றியதும்