பக்கம்:பிராயச்சித்தம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் #54 புன்னகை புரிந்தார். இதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான். ஆனால் சற்று நேரத்துக்கு முன்னால் கோமதி மேல் தாங்க முடியாத காதல் என்றாய், அதே மூச்சில் அவள் நகையில் பங்கு கேட்கிறாய்!” விரல்களில் ஒட்டிக் கொண்டிருந்த மசாலாவை அவசரமாக நக்கினான். இந்த விஷயத்தில்தான் ஒரு popular confusion புழக்கத்திலிருக்கிறது. காதல் தெய்விக மானது. அதெல்லாம் ஃப்விட். காதல் என்பது ஒரு உணர்ச்சி- you cant help it ஸ்தாயிகள் வித்யாசப் படலாம். அதனால் உடலின் ரஸ்ாயனம் மாறலாம். ஆனால் அறிவின் ரஸாயனம்-No, நான் நம்பவில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

நான் கிழவன்'

'அதனாலேயே அனுபவஸ்தன் இல்லேயா?”

  • Shut աp 3 #

"லாரி ஸ்ார். விஷயத்தோடு நிற்கிறேன். ஆமாம், என் பங்கைக் கேட்கிறேன்.' 'பங்கு என்றால் என்ன அர்த்தம்?" "பின்னே என்ன, அப்படியே முழுசா முழுங்கிடப் போறேளா? பாவம், கோமதி நினைத்துக் கொண்டிருக் கிறாள், அவளுக்கு நீங்கள் உதவி செய்யப் போய், சிறை யிலிருந்துவிட்டு வந்திருக்கிறீர்கள் என்று. ஆனால் நான் சொலகிறேன், நீங்கள் நகையை எடுத்தது உங்களுக் காகவேதான். கோமதி அசடு, நீங்க பெரிய ஆள். முழுப் பூசனிக்காயையே மறைச்சுட்டீங்க." "ஒ இப்படியும் ஒரு வாதம் இருக்கிறதா? எனக்கு இது வரை தோன்றவில்லையே! மிஸ்டர்... ஆச்சரியம் உங்கள் பேர் தெரியாமலே இதுவரை முக்கியமான விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.'