பக்கம்:பிராயச்சித்தம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 லா. ச. ராமாமிருதம் தர்மராஜன் சிரித்தார். பயமாயிருந்தது. ஆனால் சிரிப்பு வந்தது. எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண் டிருக்கிறதா? யாருக்குக் கீழ்ப்படிகிறேன் என்றுகூடத் தெரியவில்லையே, பயமாயிருந்தது. ஏம்பா, சாவப் போகிறையே, உனக்குப் பயம் § : & * * B "; 效 எதற்கு: பயத்தினால் உனக்கு என்ன பிரயோஜனம்?" பயம் ஒரு மேகம்போல் கறுத்துக்கொண்டு மேலே கவிய ஆரம்பித்தது. தர்மராஜன் ஓடினார். அவர் பின் னால் அலைகள் சிரித்தன. பயம் ஒரு ஆரோக்யமான உணர்ச்சி, தர்மராஜா! உயிரை வாழச் செய்யும் மருந்தே பயம்." தர்மராஜன் ஒடு ஓடென ஓடினார். அலைகளின் ஏளனக் கொக்கரிப்பு அவரைத் துரத்திற்று. கூடவே ஆளின் அடிச்சத்தமும் துரத்திற்று. 豪 球 * ஒடிக்கொண்டே, தர்மராஜன் திரும்பிப் பார்த்தார். ஆள் இல்லை. ஆட்கள், மூன்றுபேர் நிச்சயம் அவர்கள் வேகம் அவரை மீறியது. அவர்கள் நெருங்க நெருங்க, அவர்களுடைய கைலி வேட்டிக் கட்டு மோஸ்தரும், தலை முண்டா பனியன்களும், கிருதா மீசைகளும் எல்லா வற்றிற்கும் மேல் நில்' என்றுகூட அதட்டாமல், அவர் களுடைய அழுத்தமான நிசப்தமும் அவர்கள் நல்லதற்கு இல்லை என்று தீர்மானமாகி விட்டது. ஆனால் என்னைத் துரத்துவானேன்? அவர்களுக்கு முன் நான் ஜன நடமாட் டத்தை எட்ட முடியாது. இதோ வந்தாச்சு. நான் வாய் விட்டுச் சத்தம் போட்டேனோ. கண்டிப்பாக ஒரே