பக்கம்:பிராயச்சித்தம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 லா. ச. ராமாமிருதம் என்னிடம் சொல்லித்தான் ஆகணுமா? என்னவோ சிங்கப்பூர் போயிருந்தேன், துபாய் போயிருந்தேன்னு சொன்னால் எனக்கு என்ன தெரியப்போறது? உன்னு டைய உண்மை எனக்குத் தெரிஞ்சுதான் ஆகணுமா? எனக்கு உன் அதிர்ச்சியைத் தந்துதான் ஆகணுமா? "அவள் சன்னதியில் உட்கார்ந்துகொண்டு பொய் சொல்ல நாக்குக் கூசறது.’’ அத்தரி கொடக்கல்னானாம். மணிக்கு வந்த சிரிப்பில் தொண்டையில் சிலம்பு அதிர்ந்தது. டேய், பலே ஆளுடா நீ அவள் பீடத்துக்கே பட்டாசு வைப்பியே... இதோ காப்பி வந்துடுத்து. அப்பா என்ன கொதிக்கிறது! சீப்பிக் குடி பரவாயில்லே, கையை அலம்பிண்டுடலாம். சன்னிதானம் பார்க்காதே, காப்பி தர்மம் எச்சில், சரி, நீ மாட்டே. அப்புறம் உன் இஷ்டம். நான் வியாதிக்காரன். காப்பிஜோர் எப்படி? அதுவும் இந்த வேளைக்குப் பால் புதுசா வந்து இறங்கியிருக்கும். எனக்குத் தெரியும் ஒரு தடவை கவர்னர் காரே வாசலில் நின்னுண்டிருந்ததாகக் கேள்வி. சரி அதெல்லாம் போகட்டும். அப்போ, உன் சொல்படி, நீ ஒரு ஜெயில் பறவை, அப்படித்தானே?’’ அவருக்குக் கீழுதடு லேசாகப் பிதுங்கிற்று. இள நகையா, அடிக் கசப்பா? "சரி. பறவை இந்தப் பக்கம் ஏன் பறந்து வந்தது? இந்தப் புண்யவதி, அன்னபூரணித்தாய், படி அளக்கரவ ளிடம் உன் ரேஷின் விசாரிக்க வந்தையா?” ஆச்சர்யத்தில் அவர் கண்கள் விரிந்தன. ஆமாம், அதெப்படி? எனக்கே தெரியாமல்; ஒருவேளை என்னைப் பார்க்கணும்போல அவளுக்கே இருந்ததா? அப்படி நினைப்பதே அகம்பாவம்தான். ஆனாலும் என் கால் எப்படி, என் குருட்டு யோசனையில் என்னை இங்கே இழுத்து வந்து சேர்த்தது? இங்கே வரும் திட்டத்தில்