பக்கம்:பிறந்த மண்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ா. பார்த்தசாரதி . ژو

பொழுது போகாமல் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வில்லை. ஒரு தலைமுறையின் பரிபூரணமான வாழ்க்கையை அவர்கள் உரையாடல் அறிந்தோ, அறியாமலோ வெளிப் படுத்திக் கொண்டிருந்தது. .

வாழ்க்கையைப் பற்றிக் கனவு,காண்பவர்கள், இனிமேல் வாழ இருப்பவர்கள் பேசிக் கொண்ட பேச்சு அல்ல அது! வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டவர்கள் பேசிக் கொண்ட பேச்சு.

மாமா! இன்னும் இரண்டு இட்லி வைக்கட்டுமா? நன்றாகச் சாப்பிடுங்கள்'- என்று சிரித்துக்கொண்டே இட்லித் தட்டை எடுத்துத் தந்தாள் பகவதி.

"ஐயையோ! தாங்காது அம்மா; நீ பாட்டிற்கு அரை டசன், முக்கால் டசன் என்று ஒவ்வொரு நாளும் இப்படிச் சிரித்துப் பேசிக்கொண்டே இலையில் வைத்துவிடுகின்றாய். - மாசக்கடைசியில் கணக்கென்ன” என்று பார்த்தால் பத்து ரூபாய், பன்னிரண்டு ரூபாய்வரை நீண்டுவிடுகிறது. பெரு மாள் கோயிலில் மணியக்காரருக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக்காசு அதிகமாகச் சம்ப்ளம் கொடுக்கமாட்டேனென்கிறார்களே?' என்று குறும்பாகச் சிரித்துக்கொண்டே பதில் கூறினார் நாராயணபிள்ளை.

"நான் நிறைய இட்லி சாப்பிடுகிறவன் . அதனால்

எனக்கு நிறையச் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று

நீங்கள் கேட்கக் கூடாதோ?-பகவதி வேண்டுமென்றே மணியக்காரரோடு வாயைக் கிண்டி விளையாடினாள்.

இலையை எடுத்துக்கொண்டு. போய்ப் போட்டுவிட்டு வந்து ஆச்சி கடையில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற சுக்கு மல்லிக் காப்பிக்காக மறுபடியும் பலகையில் சப்பணங்கூட்டி உட்கார்ந்தார், மணியக்காரர்.

"ஆச்சி, ஒன்று செய்துவிடுங்களேன்...”-என்று நம்ட்டுச் சிரிப்போடு ஒரக்கண்ணால் பகவதியையும் பார்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/101&oldid=596806" இலிருந்து மீள்விக்கப்பட்டது